திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்.. கோடாரியால் தலையில் அடித்து கொலை செய்த காதலன்!
Woman Killed by Lover in Kerala | கேரளாவில் கணவனை இழந்த பெண் ஒருவர் வேறு ஒரு ஆணுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணின் மீது சந்தேகித்த அவரது காதலன், அவரை கோடாரியால் அடித்து கொலை செய்துள்ளார்.

பாலக்காடு, அக்டோபர் 22 : கேரள (Kerala) மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள். 45 வயதான இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வள்ளியம்மாளின் கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், அவர் தனது பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் காணாமல் போயுள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
வள்ளியம்மாளை கொலை செய்து புதைத்த காதலன்
வள்ளியம்மாள் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது வள்ளியம்மாளுக்கும், அதே பகுதியை சேர்ந்த பழனி என்ற நபருக்கும் பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நிலையில், ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், பழனி வள்ளியம்மாளை கொலை செய்து காட்டு பகுதியில் குழி தோண்டி புதைத்துள்ளார் என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பழனியை கைது செய்த போலீசார், அவரை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு!




சந்தேகத்தின் பேரில் நடைபெற்ற கொலை
வள்ளியம்மாளும், பழனியும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், அவருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக பழனி சந்தேகித்துள்ளார். அதற்காக அவரை கொலை செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி, சம்பவத்தன்று வனப்பகுதியில் விறகு சேகரித்துக்கொண்டு இருந்தபோது பழனி, வள்ளியம்மாளை கோடாரியால் அடித்து கொலை செய்துள்ளார். இதனை பழனி விசாரணையின் போது தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், வள்ளியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : இரட்டை கொலையில் முடிந்த கள்ளக்காதல்.. டெல்லியில் பரபரப்பு சம்பவம்!
பிரேத பரிசோதனை முடிவில் வள்ளியம்மாள் தலையில் ஏற்பட்ட காயத்தால் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பழனியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை, அவரது காதலன் சந்தேகத்தின் அடிப்படையில் கொலை செய்து புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.