Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. அடித்துச் செல்லப்பட்ட வேன்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

Van Washed Away in Idukki Floodwaters | இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அவ்வாறு கேரளாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வேன் ஒன்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. அடித்துச் செல்லப்பட்ட வேன்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
அடித்துச் செல்லப்பட்ட வேன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Oct 2025 11:07 AM IST

மூணாறு, அக்டோபர் 19 : இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக கேரளாவில் (Kerala) தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வேன் ஒன்று தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேரளாவில் இடைவிடாது கொட்டித் தீர்த்து வரும் கனமழை

இந்தியாவில் பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், நெடுங்கண்டம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அந்த பகுதியில் உள்ள கல்லார் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீரின் வேகமும், அளவும் அதிகமாக இருந்த நிலையில், தண்ணீர் கரைபுரண்டு ஓடியுள்ளது.

இதையும் படிங்க : தாய் அன்புக்கு ஈடே இல்லை.. 46 வயது மகனுக்கு கிட்னியை தானமாக கொடுத்த 72 வயது தாய்!

திடீர் வெள்ளப்பெருக்கு – தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வேன்

இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வேன் ஒன்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. பின்பு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அந்த வேன் சிறிது தூரத்தில் தலைகீழாக கரை ஒதுங்கி கிடந்துள்ளது. வேன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட போது உள்ளே ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதமும் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க : Karnataka: ஒருதலைக் காதல்.. கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை

கனமழையால் கேரளாவில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.