Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குழந்தைக்கு கொடுக்கப்பட்ட மருந்தில் நெளிந்த புழுக்கள்.. மபியில் அதிர்ச்சி சம்பவம்!

Worms Found in Children Antibiotic Medicine | இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருமள் மருந்து குடித்து 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான தகவல் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட மருந்தில் புழுக்கள் நெளிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைக்கு கொடுக்கப்பட்ட மருந்தில் நெளிந்த புழுக்கள்.. மபியில் அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Oct 2025 20:25 PM IST

குவாலியர், அக்டோபர் 17 : இந்தியாவில் குழந்தைகளுக்கான இருமள் மருந்தால் எழுந்த சிக்கல் முடிவுக்கு வருவதற்கு முன்னதாக மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள் இருந்ததாக புகார் எழுந்துள்ளது. பெண் ஒருவர் தனது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள் இருந்துள்ளது. இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைக்கு கொடுக்கப்பட்ட மருந்தில் நெளிந்த புழுக்கள்

மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் மாவட்டத்தில் உள்ள மொரார் நகரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு பெண் ஒருவர் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தைக்கு அசித்ரோமைசின் என்ற ஆன்டிபயாடிக் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த மருந்தில் புழுக்கள் நெளிந்ததை கண்டு அந்த பெண் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் மருந்து ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : மனைவியை கொலை செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய மாஸ்டர் பிளான் போட்ட கணவன்.. 6 மாதங்கள் கழித்து சிக்கியது எப்படி!

ஆய்வுக்கு அனுப்பட்ட மருந்து

புழுக்கள் நெளிந்த அந்த மருந்து மத்திய பிரதேசத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கும் மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்தது என்பதை மருத்துவ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பின்னர், பெண்ணிடம் இருந்த அந்த மருந்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கொல்கத்தாவில் ஒரு ஆய்வகத்திற்கு அதனை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த மருத்துவமனையில் இருப்பு வைப்பப்பட்டு இருந்த 306 மருந்து பாட்டில்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க : Crime: மக்களே உஷார்.. சைபர் மோசடியில் ரூ.7 கோடியை இழந்த மருத்துவர்!

306 பாட்டில்களையும் ஆய்வுக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள்

அதிகாரிகள் மருத்துவமனையில் இருந்து பறிமுதல் செய்த மருந்துகளில் எந்த விதமான பூச்சி, புழுக்களும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இருப்பினும் அந்த மருந்துகளையும் அவர்கள் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் தயாரிக்கப்பாட்ட கோல்டிரிப் இருமள் மருந்தை குடித்து 20-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த தகவல் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் மத்திய பிரதேசத்தில் தான் அதிக குழந்தைகள் பலியாகினர். இந்த நிலையில், தற்போது மத்திய பிரதேசத்தில் குழந்தைகளின் மருந்தில் மீண்டும் ஒரு சிக்கல் எழுந்திள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.