AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இஸ்ரேல்-ஈரான் போர் சூழல்: பாதுகாப்பாக கடந்து சென்ற இந்திய கப்பல்… முழு விவரம் இதோ!

Indian Cargo Ship: ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ஜலசந்த் கடல் பகுதி வழியாக இந்தியாவை சேர்ந்த ஒரு சரக்கு கப்பல் சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது.

இஸ்ரேல்-ஈரான் போர் சூழல்: பாதுகாப்பாக கடந்து சென்ற இந்திய கப்பல்… முழு விவரம் இதோ!
கோப்புப்படம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 12 Mar 2026 10:36 AM IST

ஈரான் நாடு மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்தது. இதன் காரணமாக அந்தப் பகுதி கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்தியர் தலைமையில் சவுதி அரேபியாவில் இருந்து லைபீரிய கொடியுடன் கச்சா எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் கப்பல் ஹார்முஸ் ஜல சந்தியை கடந்து மும்பை துறைமுகத்தை அடைந்தது. இரு நாடுகளுக்கு இடையே பயங்கரமாக நடைபெற்று வரும் போருக்கு மத்தியில் பாதுகாப்பாக சென்ற முதல் இந்திய கப்பல் இதுவாகும். லைபீரியாவின் கொடியுடன் கூடிய ஷென்லாங் சூயஸ் மாக்ஸ் கப்பல் கடந்த மார்ச் 1- ஆம் தேதி சவுதி அரேபியா துறைமுகமான ராஸ் தனுராவில் இருந்து கச்சா எண்ணையை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்த கப்பலின் கடைசி சிக்னல் மார்ச் 8-ஆம் தேதி ஜலசந்த் பகுதிக்குள் இருந்ததாக கடல்சார் தரவு நிறுவனங்களான லியோனின் லிஸ்ட் இன்டெலிஜஸ்ட் மற்றும் டேங்கர் ராக்கர்ஸ் தெரிவித்திருந்தன.

ஈரான் வணிக கப்பல்கள் மீது தாக்குதல்

இந்த போரின் போது ஈரான் வணிக கப்பல்களை இஸ்ரேல் தாக்கியிருந்தது. மேலும், சீனாவை நோக்கி செல்லும் வழிகளை தவிர மற்ற நீர் வழிகளில் எண்ணை கப்பல்கள் செல்ல அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தது. இதனால், உலகின் முக்கிய நீர் வழி பாதையில் கப்பல்கள் பயணிக்க முடியாத நிலை இருந்து வந்தது. உலகின் கச்சா எண்ணெ ஏற்றி செல்லும் கப்பல்களில் கிட்டத்தட்ட 5- இல் 1 பங்கு இந்த ஜலசந்தி பகுதியை கடந்து செல்கிறது. மும்பையை சேர்ந்த அந்த கப்பல் மார்ச் 9- ஆம் தேதி கண்காணிப்பு தரவுத் தளங்களில் மீண்டும் தோன்றுவதற்கு முன்பு ஆபத்தான பகுதியில் பயணித்த போது சில நுட்பங்கள் கையாளப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை – மத்திய அமைச்சர் விளக்கம்

தானியங்கி அடையாள அமைப்பு அணைப்பு

அதில், கப்பல் குறித்த அடையாளங்களை கண்டறிவதை தவிர்ப்பதற்காக அதன் டிரான்ஸ்பான்டர்கள் மற்றும் ஏ. ஐ. எஸ் அல்லது தானியங்கி அடையாள அமைப்பு ஆகியவை செயலிழக்க செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கப்பல் ஆனது நேற்று புதன்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு மும்பை துறைமுகத்தை அடைந்து மாலை 6:06 மணிக்கு தரையிறக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷென்லாங் கப்பலில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கப்பல் ஜவகர் த்வீப்பில் நிறுத்தப்பட்டுள்ளது.

3 நாடுகளை சேர்ந்த 29 பணியாளர்கள்

அந்த கப்பலில் இருந்து கச்சா எண்ணெய்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இந்த கச்சா எண்ணெய்கள் கிழக்கு மும்பையில் உள்ள மஹுலில் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த கப்பலில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த 29 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கப்பலின் கேப்டனாக சுஷாந்த் சிங் சந்து இருந்து வருகிறார்.

மேலும் படிக்க: 20 வருட பிளான்.. திருமண வீட்டில் துப்பாக்கிச் சூடு.. நூலிழையில் தப்பித்த ஃபரூக் அப்துல்லா

Follow Us