அரசன் படத்தில் சிம்புவின் அம்மாவா நான்? – விளக்கம் கொடுத்த ஆண்ட்ரியா ஜெர்மையா
Andrea Character In Arasan Movie | தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் அரசன் படத்தில் அவரது கதாப்பாத்திரம் குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் எழுதி இயக்கி வருகிறார். தொடர்ந்து இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியான போது படம் வட சென்னை பகுதியை மையமாக வைத்து உருவாகி வருவது தெரிகின்றது. மேலும் இந்தப் படத்தின் டைட்டில் டீசரைப் பார்த்து ரசிகர்கள் இது தனுஷ் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தின் சில ரெஃபரன்ஸ்கள் இருப்பதை கண்டுபிடித்து பேசத் தொடங்கினர். அந்த செய்தி சினிமா வட்டாரங்களில் வைரலான பிறகு படக்குழுவினரும் அந்த செய்தி குறித்து பேசினர். மேலும் இந்தப் படத்தில் வட சென்னை படத்தில் நடிக்கும் நடிகர்களும் நடிப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆனால் நடிகர் தனுஷ் நடிக்கிறாரா இல்லையா என்பது படம் வெளியாகும் போதே தெரியவரும். மேலும் இந்தப் படத்தில் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். தொடர்ந்து இந்த அரசன் படத்தின் படப்பிடிப்பு மற்றும் நடிகர்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் அரசன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




அரசன் படத்தில் சிம்புவின் அம்மாவா நான்?
அதன்படி நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா பேசியதாவது, அரசன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நான் பார்த்த வரையில், படம் சிறப்பாக உருவாகி வருகிறது. இதில் எனது கதாபாத்திரத்தின் பெயர் ‘சந்திரா’; இது வடசென்னை படத்தில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாகும். நான் சிலம்பரசனுக்கு அம்மாவாக நடிக்கவில்லை. இது குறித்துத் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நாங்கள் இப்படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Trisha: நான் இந்த நிலையில் இருக்க காரணம் அந்த முதல் வெற்றிதான் – திரிஷா ஓபன் டாக்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Arasan shooting is going on, and from whatever I’ve seen, it’s shaping up well. My character is Chandra, a continuation of my character from #VadaChennai. I’M NOT PLAYING #STR/#SilambarasanTR’s mother. Wrong news is being spread about it. We’re working on the film.
– #Andrea pic.twitter.com/koI6XlVtPu— Movies Singapore (@MoviesSingapore) August 4, 2026
Also Read… சூர்யா 47 படத்தின் ரிலீஸ் எப்போது? நடிகர் சூர்யா விளக்கம்