கரூர் மாணவி கொலையில் திடீர் திருப்பம்.. பாலியல் கொலை செய்ததாக கள்ளக்காதலன் வாக்குமூலம்.. அதிர்ச்சி சம்பவம்!
Karur Student Murder : கரூரில் 12- ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில், அக்காவின் கள்ளக்காதலன் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் போலீசார் விசாரணையில தெரிய வந்துள்ளது.
கரூர் மாவட்டம், வெங்கமேடு திட்ட சாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவருக்கு வினோதினி மற்றும் தர்ஷினி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இதில், தர்ஷினி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் திடீரென மாயமானார். இது குறித்து வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிய நிலையில், காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரித்ததில், சிறுமியின் சகோதரி வினோதினி மற்றும் அவரது கள்ளக்காதலன் மோகன்ராஜ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தர்ஷினியை கொலை செய்ததாக தெரிவித்திருந்தனர்.
மாணவி கொலையில் திடீர் திருப்பம்
இந்த நிலையில், இதில் திடீர் திருப்பமாக பள்ளி மாணவி தர்ஷினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக, கைது செய்யப்பட்ட மோகன்ராஜிடம் போலீசார் விசாரித்ததில் அவர் கூறியதாவது: எனக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் உள்ள நெய் கம்பெனியில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்தேன். வினோதினி என்னை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 17- ஆம் தேதி வினோதினியை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்ற போது தர்ஷினி என்னை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறினார்.
மேலும் படிக்க: இலங்கையில் இதென்ன அநியாயம்.. தமிழக மீனவர்களின் படகுகள் உடைப்பு.. கடற்படையினர் அட்டூழியம்!




மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றேன்
இதில், ஆத்திரமடைந்த நான் அவரை கத்தியால் தலையில் தாக்கினேன். இதில், மயக்கம் அடைந்து கீழே விழுந்த தர்ஷினியை பாலியல் வன்கொடுமை செய்து கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன். பின்னர், வினோதினி உதவியுடன் தர்ஷனியின் சடலத்தை ஆட்டோவில் ஏற்றி சென்று வாய்க்கால் புதருக்குள் வீசி விட்டேன் என்று அதிர்ச்சி வாக்குமூலத்தை தெரிவித்தார். தொடர்ந்து, தர்ஷினியே கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தியை மீட்பதற்காக மாணவி உடல் கடந்த இடத்துக்கு மோகன்ராஜ் போலீசார் அழைத்துச் சென்றனர்.
போலீசாரிடம் இருந்து தப்பியவருக்கு GH – இல் சிகிச்சை
அப்போது, அவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். இதில், எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்ததில் காயமடைந்த நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அக்காவின் கள்ளக்காதலன் அவரது சகோதரியை வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: மகளுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்த காவலர்.. போலீசில் பரபரப்பு புகார்.. சென்னை காவல்துறையில் பரபரப்பு!