“TN 07 CM 2031” தொல். திருமாவளவன் பயணித்த கார் எண் திடீர் வைரல்.. முழு விவரம் உள்ளே!
VCK Leader Thol Thirumavalavan Car Number : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பயணம் செய்த கார் எண் "TN 07 CM 2031" என்று இருந்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை மாவட்டம், பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பர் 20- ஆம் தேதி) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்போது, அவர் வருகை தந்த கார் எண் தற்போது இணையதளத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருவதுடன், பேசும் பொருளாகி உள்ளது. ஏனென்றால், தமிழகத்தில் அடுத்த முதல்வர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தான் என்று அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர் கூறிவரும் நிலையில், அவர் வருகை தந்த காரின் எண் “TN 07 CM 2031” தற்போது அந்த விவகாரத்தை மீண்டும் பேசும் பொருளாக்கி உள்ளது.
முதல்வராக தொல். திருமாவளவனை முன்னிருத்த முடிவு
ஏற்கெனவே, தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக ஆட்சி அமைப்பதற்கு திமுக மற்றும் அதிமுக ஒர் அணியாக இணைந்து முதல்வர் வேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை முன்னிறுத்தலாம் என்று பேசப்பட்டதாகவும், இது தொடர்பாக மறைமுக தூது அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த கருத்தை விசிக தலைவர் தொல். திருமாவளவனும் தெரிவித்திருந்தார்.




மேலும் படிக்க: இடதுசாரிகள் வாபஸ் பெற்றால்…ஆட்சியை கலைக்க காத்திருக்கும் ஆளுநர் – சிபிஐ முத்தரசன் பரபரப்பு கருத்து
2031- இல் தமிழக முதல் அமைச்சர்
இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் தொல். திருமாவளவன் ஆதரவாளர்களும் இதே கருத்தை முன் வைத்து வருகின்றனர். இதனால், எதிர்வரும் 2031 சட்டமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் முதல்வர் வேட்பாளர்கள் தொடர்பான போட்டி உச்சத்தை எட்டும் எனவும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக வரவேண்டும் என்ற கருத்தும் பரவலாக எழும் என்று கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. பின்னர், அந்த கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்து வந்தது.
தலைவர்-CM-2031…💥TN https://t.co/SJzXAWxl94 2031
சென்னை பூந்தமல்லி இவிபி அரங்கில் நடைபெற்ற “திருமா 35 -சமூகநீதியின் சகாப்தம்’ நிகழ்ச்சிக்கு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் வருகை தந்த வாகனம் தொண்டர்களின் கவனத்தை ஈர்த்தது.! pic.twitter.com/RYyUkNYkZd
— THANJAI.LENIN VCK (@VckLenin) September 20, 2026
அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளான “சிம்” பதிவெண்
தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைக்கப்பட்ட மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்துள்ளது. முன்னதாக, தவெக அமைச்சரவையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ வன்னி அரசு இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில், தொல். திருமாவளவன் பயணம் செய்த காரில் “சிஎம்” என்ற பதிவு எண் இருந்தது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.
மேலும் படிக்க: “கனிமொழி ராஜாத்தி கருணாநிதி” திடீர் பெயர் மாற்றத்திற்கு இதுதான் காரணமா? நெகிழ்ச்சி பின்னணி!