“கனிமொழி ராஜாத்தி கருணாநிதி” திடீர் பெயர் மாற்றத்திற்கு இதுதான் காரணமா? நெகிழ்ச்சி பின்னணி!
Kanimozhi Rajathi Karunanidhi : திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தனது பெயரை கனிமொழி ராஜாத்தி கருணாநிதி என பெயர் மாற்றியதற்கு பின்னால் ஒரு நெகிழ்ச்சியான காரணம் ஒன்று அமைந்துள்ளது. அது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொது செயலாளர்களில் ஒருவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தனது பெயரை ” கனிமொழி ராஜாஜி கருணாநிதி” என அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார். அரசியல் களம், மக்களவை மற்றும் அரசு ஆவணங்களில் “கனிமொழி கருணாநிதி” என்று இருந்த நிலையில், தற்போது இந்த புதிய பெயர் மாற்றத்தை அவர் மேற்கொண்டுள்ளார். இந்த பெயர் மாற்றத்துக்கு பின்னால் ஒரு நெகிழ்ச்சியான காரணம் ஒன்று உள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம். பொதுவாக அனைவரும் தங்களது தந்தையின் பெயரை மட்டுமே பெயரின் பின்னாலோ அல்லது முதல் எழுத்தாகவோ பயன்படுத்தப்பட்டு வருவது வழக்கமாகும். அந்த வகையில், தற்போது தாயின் பெயரையும் இணைத்துக் கொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி, கனிமொழி, தனது தாய் ராஜாத்தி அம்மாவின் பெயரை தனது பெயரோடு இணைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக திட்டமிட்டு இருந்தாராம்.
தனது பெயரோடு தாய் பெயரை இணைக்க காரணம்
அதன்படி, தனது தாய் மீது உள்ள பாசத்தால் அவர் நல்ல உடல் நலத்தோடு இருக்கும்போதே இந்த பெயர் மாற்றத்தை முன்னெடுக்க கனிமொழி விரும்பி உள்ளார். அதன் அடிப்படையில், தனது பெயரோடு கனிமொழி ராஜாத்தி கருணாநிதி என்று இணைத்து அரசியலில் பெயர் மாற்றம் செய்துள்ளார். இதற்கு அவரது தாய் ராஜாத்தி அம்மாள் மிகுந்த மகிழ்ச்சியும், நிகழ்ச்சியும் அடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த பெயர் மாற்றம் தமிழ்நாடு அரசியலில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழக முதல்வர் லண்டனுக்கு பதிலாக மதுரை, கோவை போகலாம் – அண்ணாமலை அட்வைஸ்!




தமிழக அரசிதழ்- நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியீடு
பொதுவாக ஒருவர் தனது பெயரை முறைப்படி மாற்ற வேண்டும் எனில் அதனை சட்டரீதியாக அரசிதழில் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கான அனைத்து சட்ட நடைமுறைகளையும் கனிமொழி பூர்த்தி செய்துள்ளார். கடந்த 1968- ஆம் ஆண்டு ஜனவரி 5- ஆம் தேதி பிறந்த கனிமொழி கருணாநிதி என்ற பெயரோடு அழைக்கப்பட்டு வந்த இவர் தற்போது கனிமொழி ராஜாத்தி கருணாநிதி என்றே அழைக்கப்படுவார் என தெரிவித்துள்ளார். இந்த பெயர் மாற்றம் தமிழக அரசிதழில் மட்டும் இன்றி நாடாளுமன்ற இணையதளத்தில் கனிமொழி விவர குறிப்பில் இந்த பெயர் மாற்றம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பிரவேசத்துக்கு பின்னர் இரு முறை பெயர் மாற்றம்
அரசியலுக்கு வருவதற்கு முன்பு கவிதை, இலக்கியம், இதழியல் ஆகியவற்றின் ஆர்வம் கொண்ட கனிமொழி இலக்கிய வட்டாரங்களிலும், புத்தகங்களிலும் கனிமொழி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்ததார். அரசியல் பிரவேசத்திற்கு பிறகு தனது தந்தையின் பெயரை இணைத்து கனிமொழி கருணாநிதி என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த பெயர் மாற்றத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.
மேலும் படிக்க : இடதுசாரிகள் வாபஸ் பெற்றால்…ஆட்சியை கலைக்க காத்திருக்கும் ஆளுநர் – சிபிஐ முத்தரசன் பரபரப்பு கருத்து