AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இடதுசாரிகள் வாபஸ் பெற்றால்…ஆட்சியை கலைக்க காத்திருக்கும் ஆளுநர் – சிபிஐ முத்தரசன் பரபரப்பு கருத்து

Mutharasan Responds to Aadhav : சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன், இடது சாரிகள் தங்கள் ஆதரவை திரும்ப பெற்றால் இந்த ஆட்சி கலைந்துவிடும். இடதுசாரிகள் எப்போது வாபஸ் பெறுவதாக சொல்வார்கள் என ஆளுநர் காத்துக்கொண்டிருக்கிறார் என்றார்.

இடதுசாரிகள் வாபஸ் பெற்றால்…ஆட்சியை கலைக்க காத்திருக்கும் ஆளுநர் – சிபிஐ முத்தரசன் பரபரப்பு கருத்து
ஆதவ் அர்ஜூனா - முத்தரசன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Sep 2026 20:59 PM IST

சென்னை, செப்டம்பர் 22 : சென்னையில் செப்டம்பர் 20, 2026 இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன், இடது சாரிகள் தங்கள் ஆதரவை திரும்ப பெற்றால் இந்த ஆட்சி கலைந்துவிடும். சண்முகமும், வீரபாண்டியனும் எப்போது வாபஸ் பெறுவதாக சொல்வார்கள் என ஆளுநர் காத்துக்கொண்டிருக்கிறார். இதையெல்லாம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிந்து பேசுகிறாரா? இல்லை தெரியாமல் பேசுகிறாரா? என எனக்குத் தெரியவில்லை என்றார்.

ஆட்சியை கலைக்க ஆளுநர்  காத்திருப்பதாக சிபிஐ முத்தரசன் பேசியது சர்ச்சை

முன்னதாக இடைத் தேர்தலை முன்னிட்டு மதுராந்தகத்தில் தவெக சார்பில் செப்டம்பர் 19, 2026 அன்று வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தலைமைச் செயலகம் இட நெருக்கடியில் இருப்பதால் புது தலைமைச் செயலகம் கட்ட பட்டினப்பாக்கம் தேர்வு செய்தோம். இதற்கு மீனவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனை மற்றக் கட்சியினர் அரசியல் செய்கின்றனர். இன்னும் முதலமைச்சர் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முடிவே எடுக்கவில்லை. கம்யூனிஸ்ட் தோழர்கள் சில நேரம் வந்து பேசுவதுதான் வருத்தமாக இருக்கிறது என்றார்.

இதையும் படிக்க : ஏஐ மூலம் 19 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை பிடித்த சென்னை போலீஸ் – பரபரப்பு சம்பவம்

மேலும் பேசிய அவர்,  இங்கே இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் தோழர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். கடந்த ஆட்சியில் ஊழல் நடந்ததா, இல்லையா? டாஸ்மாக்கில் ஊழல் நடந்ததா, இல்லையா? அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்ததா, இல்லையா? ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்ததா, இல்லையா? நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் நடந்ததா, இல்லையா? பொதுப்பணித்துறையில் நடந்ததா, இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து பதிலளித்து பேசிய முத்தரசன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு திடீரென ஏன் எங்கள் மீது கோபம் என எனக்கு தெரியவில்லை. அவர் சொல்லும் இடதுசாரிகளின் தயவில்தான் இந்த ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது. சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவை தங்களது ஆதரவை திரும்பப் பெற்றால் இந்த அமைச்சரவையே இருக்காது. சண்முகமும், வீரபாண்டியனும் எப்போது இதனைச் சொல்வார்கள் என ஆளுநர் காத்திருக்கிறார். இதனை ஆதவ் அர்ஜுனா தெரிந்துதான் பேசுகிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை என்றார்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather report: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… வானிலை மையம் எச்சரிக்கை!

முன்னதாக சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆதவ் அர்ஜுனா முதலில் எந்த கட்சியில் இருந்தீர்கள்? திமுகவில் இருந்தீர்கள். அடுத்தது விடுதலை சிறுத்தைக்கு போனீர்கள். அதன் பிறகு என்னை பார்த்து சந்தித்து பேசினீர்கள். அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று கேட்டார் என பரபரப்பு கருத்தை தெரிவித்தார்.

Follow Us