“கம்யூனிஸ்ட் தோழர்கள் பேசுவது வருத்தமளிக்கிறது!”.. சாட்டையை சுழற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
Minister Aadhav Arjuna Slams Opposition: புதிய தலைமைச் செயலக விவகாரம் மற்றும் மீனவர் நலன் குறித்து விளக்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கம்யூனிஸ்ட் தோழர்களின் அரசியல் வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார். மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் அன்பையும் நம்பிக்கையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதாகவும், வரவிருக்கும் இடைத்தேர்தலிலும் ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளார்.
சென்னை, செப்.20: தமிழக அரசியல் களத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் புதிய அரசு அமைந்த பிறகு மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நிர்வாக முடிவுகள் குறித்து விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. புதிய தலைமைச் செயலக விவகாரம் மற்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அரசின் செயல்பாடுகள் குறித்தும், தேர்தல் அரசியல் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும் பல்வேறு அதிரடி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: “செலவு ரூ.1.38 லட்சம் கோடி.. வருவாய் பற்றாக்குறை ரூ.20,340 கோடி!”.. வெளியான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை!!
கம்யூனிஸ்டுகளுக்கு பதிலடி:
புதிய தலைமைச் செயலக திட்டம் மற்றும் நில ஆய்வு குறித்துப் பேசிய ஆதவ் அர்ஜுனா, எந்தவொரு திட்டத்தையும் அறிவித்த உடனே எதிர்க்கட்சிகள் அதற்கு எதிராகக் களமிறங்கக் கூடாது எனக் குறிப்பிட்டார். மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை ஆய்வு செய்த பின்னரே அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும், இந்த அரசு எப்போதும் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலன் காக்கும் அரசாகவே செயல்படும் என்றும் உறுதியளித்தார். இதனிடையே கம்யூனிஸ்ட் தோழர்கள் தேவையின்றி விமர்சித்து அரசியல் செய்வது வருத்தமளிப்பதாகத் தெரிவித்த அவர், தேர்தலின் போது தவெகவை ‘ரீல்ஸ் கட்சி’, ‘இன்ஸ்டாகிராம் கட்சி’ என கேலி செய்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளதாகச் சாடினார்.
விஜய் தலமையிலான ஊழலற்ற ஆட்சி:
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா, இத்தகைய ஊழலற்ற நிர்வாகத்தைக் கடந்த காலங்களில் கலைஞர் ஆட்சிக் காலத்திலோ அல்லது மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்திலோ பார்க்க முடிந்தது இல்லை எனக் கடுமையாகக் விமர்சித்தார். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக 2026 சட்டமன்றத் தேர்தலில், ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட காசு கொடுக்காமல், மக்களிடம் அன்பையும் நம்பிக்கையையும் மட்டுமே பெற்று முதலமைச்சர் விஜய் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிக்க: அதிமுகவில் துணைப்பொதுச்செயலாளர் பதவி கேட்டார் – ஆதவ் அர்ஜுனா குறித்து இபிஎஸ் கருத்து
அதிமுகவின் அத்தியாயம் முடிந்தது:
வரவிருக்கும் இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் ஓட்டுக்கு காசு கொடுக்காது என்பதை எழுதி வைத்துக் கொள்ளலாம் என சவால் விடுத்த ஆதவ் அர்ஜுனா, திமுக அமைச்சர்களைப் போல் ஓட்டுக்கு ரூ.5,000 கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க முடியாது என்றார். மேலும், “இனிமேல் இரட்டை இலையும் விசிலும்தான் ஒன்று” எனக் குறிப்பிட்ட அவர், அதிமுகவின் அத்தியாயம் முடிந்துவிட்டதாகவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் ஆசிகளும் அன்பும் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் ‘விசில்’ சின்னத்திற்குத்தான் இருக்கிறது என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.