கூடலூரில் இருவரை கொன்ற புலி பிடிபட்டது!
கூடலூர் வனக்கோட்டம், ஓவேலி வனச்சரகப் பகுதியில் இரண்டு பேரைத் தாக்கிக் கொன்ற புலி, வனத்துறையினரின் தீவிர நடவடிக்கைக்குப் பின் பிடிபட்டது. புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முதுமலை புலிகள் காப்பகம், நடுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 305 தானியங்கி மற்றும் GSM கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டது. மேலும், புலியைப் பிடிக்க 14 இடங்களில் பிரத்யேக கூண்டுகள் அமைக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட வனத்துறை சிறப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, புலியைப் பிடிக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தினர்.
கூடலூர் வனக்கோட்டம், ஓவேலி வனச்சரகப் பகுதியில் இரண்டு பேரைத் தாக்கிக் கொன்ற புலி, வனத்துறையினரின் தீவிர நடவடிக்கைக்குப் பின் பிடிபட்டது. புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முதுமலை புலிகள் காப்பகம், நடுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 305 தானியங்கி மற்றும் GSM கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டது. மேலும், புலியைப் பிடிக்க 14 இடங்களில் பிரத்யேக கூண்டுகள் அமைக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட வனத்துறை சிறப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, புலியைப் பிடிக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தினர். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு வனத்துறை அமைச்சர் R.V. இரஞ்சித்குமார் கூடலூர் பகுதிக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். தற்போது புலி பிடிபட்டுள்ளதால், கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
