தடாகத்தில் மாட்டை தாக்க முயன்ற காட்டு யானை.. வெளியான சிசிடிவி காட்சிகள்..
கோவை மாவட்டம் தடாகம், மாங்கரை, சோமையனூர், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, தடாகம் உச்சயனூர் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளது. பின்னர் எஸ்.எம். நகர் பகுதியில் உள்ள மாட்டு கொட்டகைக்குள் புகுந்து மாட்டு தீவனங்களை தின்றுள்ளது.

இதையடுத்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகள் கத்தியதால், ஆத்திரமடைந்த யானை ஒரு மாட்டை தாக்க முயன்றது. அதிர்ஷ்டவசமாக அந்த மாடு தாவி குதித்து தப்பியதால், யானை அங்கிருந்து சென்றது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.