கும்பாபிஷேகத்திற்கு தயராகும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கோபுரங்கள்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்டம்பர் 17, 2026 அன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் செப்டம்பர் 11, 2026 முதலே தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தான், கோயில் கோபுரங்கள் முழுவதும் வண்ண விலக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்டம்பர் 17, 2026 அன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் செப்டம்பர் 11, 2026 முதலே தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தான், கோயில் கோபுரங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயில் கோபுரங்கள், பிரகாரங்கள், மூலவர் சன்னதிகள், கொடிமரங்கள் என அனைத்து இடங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, கோயில் முழுவதையும் அலங்கரிக்க சுமார் 5 டன் வண்ண மலர்களும் வந்து இறங்கியுள்ளன. அரளிப்பூ, இருவாச்சி பூக்கள், மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு என பல வண்ணங்களில் கோயில் முழுவதையும் அலங்கரிக்க வண்ண மலர்கள் வந்து இறங்கியுள்ளன. இந்த மகா கும்பாபிஷேகத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
