கோவை வடவள்ளியில் பரவசமூட்டிய வள்ளி கும்மியாட்டம்..
கோவை வடவள்ளி பி.என்.புதூர் 41-வது வார்டில் இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் 13-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் சிறப்பம்சமாக, கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலையான வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. சிறுமிகள் முதல் வயதான பெரியவர்கள் வரை பாரம்பரிய சீருடை அணிந்து, ஒரே நேர்த்தியான முறையில் கைகளைத் தட்டி கும்மியாடினர். இதனை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நேரில் கண்டு ரசித்து, கைதட்டி உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு நெய்வேத்தியப் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.