AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
சேலத்தில் 300 வகையான சீர்வரிசைகளுடன் கல்யாண கோலத்தில் சித்தி புத்தி விநாயகர்!

சேலத்தில் 300 வகையான சீர்வரிசைகளுடன் கல்யாண கோலத்தில் சித்தி புத்தி விநாயகர்!

Sathis S
Sathis S | Updated On: 14 Sep 2026 14:21 PM IST

Vinayagar Chaturthi 2026: சேலம் செவ்வாய்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சித்தி, புத்தியுடன் கல்யாண கோலத்தில் காட்சியளிக்கும் விநாயகர் சிலை பக்தர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. திருமண நிகழ்வை நினைவூட்டும் வகையில் எல்.இ.டி டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், பட்டுச்சேலைகள் உள்ளிட்ட 300 வகையான சீர்வரிசைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அலங்காரத்தைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

சேலம், செப்டம்பர் 14: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களின் மனதில் நீங்காத இடம்பெற்ற இறைவனான விநாயகப் பெருமானை வழிபடக் கோவில்களிலும், பொது இடங்களிலும் விசேஷ பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காகவும் வழிபாட்டிற்காகவும் பல்வேறு கலைநயமிக்க வடிவங்களில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வீற்றிருக்கின்றன.

சேலம் செவ்வாய்பேட்டையில் அபூர்வக் கோலம்:

சேலம் மாநகர் செவ்வாய்பேட்டை பகுதியில், ‘எலைட் நண்பர்கள் குழு’ சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டில் தங்களது 46-வது ஆண்டு படைப்பாக, சித்தி மற்றும் புத்தியுடன் திருமணக் கோலத்தில் காட்சியளிக்கும் சித்தி புத்தி விநாயகரின் திருவுருவச் சிலையை அவர்கள் பிரதிஷ்டை செய்துள்ளனர். புதுமையான மற்றும் தத்ரூபமான அமைப்பில் காட்சியளிக்கும் இந்தச் சிலை, அப்பகுதிக்கு வரும் பக்தர்களையும் பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்து வருகிறது.

பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம்:

அரிய வகை அலங்காரத்துடனும், பிரம்மாண்டமான சீர்வரிசைகளுடனும் காட்சியளிக்கும் இந்த சித்தி புத்தி விநாயகரைத் தரிசிக்கச் சேலம் நகர்ப்புறப் பகுதிகள் மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து வழங்கி வருகின்றனர். நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வரும் பக்தர்கள், இந்தத் தனித்துவமான ஏற்பாட்டையும் கலைநயத்தையும் மனதாரப் பாராட்டிச் செல்கின்றனர்.

Published on: Sep 14, 2026 02:21 PM
Follow Us