AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
தொழிற்சாலை கழிவால் இளஞ்சிவப்பு நிறமாக மாறிய ஆறு; பொதுமக்கள் அதிர்ச்சி

தொழிற்சாலை கழிவால் இளஞ்சிவப்பு நிறமாக மாறிய ஆறு; பொதுமக்கள் அதிர்ச்சி

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Sep 2026 13:28 PM IST

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிளையூரணி பகுதியில் உள்ள உப்பாறு ஓடை ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்துக்கு ஆற்று நீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளது. மாப்பிளையூரணி–தருவைக்குளம் சாலையில் உள்ள பாலம் முதல் இந்நிறமாற்றம் காணப்படுகிறது.

செப்டம்பர் 10, 2026: தூத்துக்குடி மாவட்டம், மாப்பிளையூரணி பகுதியில் உள்ள உப்பாறு ஓடை ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்துக்கு ஆற்று நீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

மாப்பிளையூரணி–தருவைக்குளம் சாலையில் உள்ள பாலம் முதல் இந்நிறமாற்றம் காணப்படுகிறது. ஆற்றின் கரையோரம் செயல்படும் கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், நண்டு, இறால், ஆக்டோபஸ் உள்ளிட்டவற்றை ஏற்றுமதிக்காக சுத்தம் செய்து பேக்கிங் செய்கின்றன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலப்பதாகக் கூறப்படுகிறது.  இதனால் ஆற்றில் மீன்கள் காணப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மழைக்காலங்களில் அதிகளவில் கழிவுகள் நீர்நிலையில் கலப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

 

Follow Us