AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
மேட்டுப்பாளையத்தில் மீண்டும் உலா வந்த பாகுபலி யானை..

மேட்டுப்பாளையத்தில் மீண்டும் உலா வந்த பாகுபலி யானை..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Sep 2026 12:55 PM IST

நேற்று கோத்தகிரி சாலையில் பாகுபலி யானை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி, யானை வனப்பகுதிக்குள் செல்ல வழிவிட்டனர். பின்னர் யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றது. காயம் குணமாகும் வரை யானைக்கு தொடர்ந்து சிகிச்சையும் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக “பாகுபலி” என அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானை நடமாடி வருகிறது. பகலில் வனப்பகுதியிலும், இரவில் விளைநிலங்களிலும் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதுவரை மனிதர்களை தாக்கியதில்லை என்றாலும், விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு மற்றொரு யானையுடன் ஏற்பட்ட மோதலில் பாகுபலி யானையின் வால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் தகவலின்பேரில் வனக்கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Follow Us