Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi)

விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi)

இந்து மதத்தில் முழுமுதற் கடவுள் ஆக அறியப்படுகிறார். நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் விநாயகரை வணங்காமல் செய்வது இல்லை. திரும்பும் திசை எங்கிலும், அல்லது ஏதேனும் கோயிலுக்கு சென்றாலும் அங்கு நம்மை முதலில் வரவேற்பவர் விநாயகர் தான். இப்படிப்பட்ட விநாயகர் பிறந்த தினம் விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi) என்ற பெயரில் இந்தியா முழுவதும் மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இத்தகைய விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி திதியில் கடைபிடிக்கப்படுகிறது

Read More

Ganesh Chaturthi 2025: விநாயகர் சதுர்த்தி எப்போது? – அதன் வரலாறு தெரிஞ்சுகோங்க!

விநாயகர் சதுர்த்தி, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் கொண்டாடப்படும் முக்கியமான இந்து மத பண்டிகையாகும். இது இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. சமூக ஒருமைப்பாடு மற்றும் கலாச்சார பரிமாற்றத்தையும் இது ஊக்குவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. விதவிதமான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து இந்நாளில் வழிபடுவார்கள்.

சிவகங்கை : விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. தயாராகும் சிலைகள்!

2025, ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பக்தர்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வர், பின்னர் சிலைகளை அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்நிலையில் சிவகங்கையில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.

Food Recipe: விநாயகர் சதுர்த்திக்கு சுலபமான கொழுக்கட்டை செய்வது எப்படி? படிப்படியான வழிமுறை இதோ!

Vinayagar Chaturthi Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தியில் பிரசித்தி பெற்ற கொழுக்கட்டை செய்முறையை இந்த கட்டுரை விளக்குகிறது. பச்சரிசி, புழுங்கல் அரிசி, தேங்காய், வெல்லம் போன்ற பொருட்களை பயன்படுத்தி சுவையான சூப்பரான கொழுக்கட்டையை எப்படி செய்வது என்பதை படிப்படியான வழிமுறைகளுடன் விளக்குகிறது.

சத்தீஸ்கரில் விநாயகர் சிலை செய்யும் சிறை கைதிகள்

நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 27, 2025 அன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு விநாயகர் சிலை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் விநாயகர் சிலையை உருவாக்கி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. சிலைகள் கரைக்க புதிய விதிமுறைகள்..

Vinayagar Chathurthi 2025: விநாயகர் சதுர்த்தி வரும் 2025 ஆகஸ்ட் 27 அன்று கொண்டாடப்படும் நிலையில், நீர்நிலைகளில் சிலைகள் கரைக்க களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரசாயனம் கலந்த எந்த பொருளும் பயன்படுத்தக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி.. மிக பிரமாண்டமாக தயாராகும் விநாயகர் சிலை!

முழு முதற் கடவுளாக அறியப்படும் விநாயகர் பிறந்த தினமான விநாயகர் சதுர்த்தி 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு விதவிதமான வடிவங்களில் வித்யாசமாக விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் ஹைதராபாத்தின் கைரதாபாத் பகுதியில் ஆண்டுதோறும் நிறுவப்படும் மிகப்பெரிய விநாயகர் சிலை செய்யும் பணியானது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

திருச்சி : நெருங்கும் விநாயகர் சதுர்த்தி.. தயாராகும் சிலைகள்!

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகை விநாயகர் சதுர்த்தி. விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாகவே சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்து பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்நிலையில் இந்த வருடத்துக்கான விநாயகர் சதுர்த்தி 2025, ஆகஸ்ட் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக திருச்சியில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.