பூமிக்கு அருகே மிகப்பெரிய விண்கல் ஒன்று கடந்து செல்ல இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 410 அடி அகலமுடைய இந்த விண்கல் மணிக்கு 21 ஆயிரத்து 300 மைல் வேகத்தில் பயணம் செய்து வருகிறது. இந்த விண்கல் இன்று பூமிக்கு மிக அருகில் வந்தாலும் எந்தவித ஆபத்தும் இல்லை என விஞ்ஞானிகள் உறுதியளித்துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 36 லட்சம் மைல் தொலைவில் தான் இது கடந்து செல்லும் என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.