கேஜிஎஃப் நட்சத்திரம் யாஷ் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படத்தின் புதிய போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டாக்ஸிக் படத்தில் யாஷ் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே ராயா என்ற கதாபாத்திரத்தில் தாடியுடன் வெளியான லுக் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது டிக்கெட் என்ற மற்றொரு கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.