சத்துணவு அமைப்பாளர்கள்- ஊராட்சி செயலர்களுக்கு குட் நியூஸ்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Tamil Nadu government: தமிழகத்தில் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் ஆகியோருக்கு ஓய்வூதியம் மற்றும் பணி ஓய்வின்போது, வழங்கப்படும் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பை பார்க்கலாம்.
தமிழகத்தில் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோருக்கு ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.1000 உயர்த்தப்பட்டு ரூ.3,400- ஆக வழங்கப்பட உள்ளது. மேலும், இவர்கள் பணி நிறைவு பெறும்போது, வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அலுவலர்கள் குழு 2017- இன் பரிந்துரையின் அடிப்படையில், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு சிறப்பு காலமுறை ஓய்வூதியம் மற்றும் ஒட்டுமொத்த தொகை வழங்கப்பட உள்ளன.
குறு அங்கன்வாடி பணியாளர்கள்- வன களப்பணியாளர்கள்
இதே போல, குறு அங்கன்வாடி பணியாளர்கள், வன களப்பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும் சிறப்பு கால முறை ஓய்வூதியம் மற்றும் ஒட்டு மொத்த தொகை வழங்குவதற்காக ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு ஓய்வூதியம் மற்றும் ஒட்டுமொத்த தொகை உயர்த்தி வழங்கவும், குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களது இறுதிச் சடங்குக்கான செலவுத் தொகை வழங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: திமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை… கொலை வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!




துறைகளின் உரிய கணக்கின் அடிப்படையில் வழங்கப்படும்
இதில், உயர்த்தப்பட்ட சிறப்பு ஓய்வூதியம், ஒட்டுமொத்த தொகை, குடும்ப ஓய்வூதியம் ஆகியவை அந்தந்த துறைகளின் உரிய கணக்கு தலைப்புகளின் கீழ் அனுமதிக்கப்படும். இதற்கான கூடுதல் செலவினம் அந்தந்த துறைகளின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கணக்கு தலைப்புகளின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
ஓய்வூதியம் உயர்த்தப்பட்டதற்கான ஆணைகள் வெளியீடு
இதில், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும், சத்துணவு அமைப்பாளர்கள், தூய்மை பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தூய்மை பணியாளர்கள் மற்றும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் ஆகியோருக்கு ஓய்வூதியம் மற்றும் பணி நிறைவின் போது வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை ஆகியவை உயர்த்தப்பட்டு அதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் நிகழ்ந்த ஊழல்… அதிமுக ஆட்சியில் விசாரணை நடத்தப்படும்… எடப்பாடி பழனிசாமி சூளுரை!