மலையாள திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'பௌமா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் டொவினோ தாமஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ரெஜின் எஸ். பாபு இயக்கி, திரைக்கதை எழுதியுள்ள 'பௌமா', ஒரு மர்மத் திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சாகர் சூர்யா, திலீஷ் போத்தன், வினீத், லேனா உள்ளிட்ட பலர் டேபிளை சுற்றி அமர்ந்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.