திமுக ஆட்சியில் மக்கள் பெரும் துயரம் அடைந்துள்ளனர்… அண்ணாமலை காட்டம்!
Annamalai Criticized DMK : கடந்த 5 ஆண்டு கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழக மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்துள்ளதாகவும், இதற்கான பதிலை வருகிற சட்டமன்ற தேர்தலில் வெளிபடுத்துவார்கள் என்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு அரசியல் தலைவருக்கான முழு இலக்கணம் இருக்கக்கூடிய ஒரு தலைவர் நல்லகண்ணு. 101 வயதான நல்ல கண்ணு எந்த அரசியல் பொறுப்பிலும் இல்லாமல் மக்களின் அன்பை மற்றும் பெற்ற அவருக்கு எங்களது மரியாதை கலந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம். பாஜக தொடர்பான தொகுதி பங்கீடு விவகாரங்களை பேசுவதற்கு வருகிற 26 மற்றும் 27- ஆம் தேதிகளில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகம் வர உள்ளார். எனக்கு பாஜக தலைமை வழங்கிய பணிகளை நான் சிறப்பாக செய்து வருகிறேன். தொகுதி பங்கீடு விவகாரம் தொடர்பாக தலைவர்கள் அறிவிப்பார்கள். எங்களது கூட்டணியில் எந்த குழப்பமும் கிடையாது. காங்கிரஸை பொறுத்தவரை தமிழகத்தில் அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என்று கூறிவிட்டு டெல்லியில் சென்று பங்கு வேண்டும் என்று கூறுகின்றனர்.
திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைக்க முடிவு
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு முன்பு வழங்கிய தொகுதிகளில் ஒரு தொகுதிகள் குறைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதில், திருமாவளவனுக்கும் ஒரு தொகுதி குறைக்கப்பட உள்ளது. இதனால் திமுக கூட்டணியில் இருப்பவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனரா என்ற சந்தேகம் உள்ளது. எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சராக பணிபுரிந்த அனுபவம் மிக்கவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர். தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றனர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஓ. பன்னீர் செல்வத்தை பலமுறை முதல்வர் ஆக்கியுள்ளார்.
மேலும் படிக்க: அதிமுக நாட்டு மக்களுக்கான கட்சி… திமுக வீட்டு மக்களுக்கான கட்சி.. எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!




திமுக ஆட்சி காலத்தில் மக்கள் பெரும் துயரம் அடைந்துள்ளனர்
இதனால், ஒரே நேர்கோட்டில் அனைவரும் உள்ளனர். தமிழகத்தில் மின்சார வரி, சொத்து வரி உள்ளிட்டவை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தற்போது வரை தமிழக மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் உரிய பதிலை வழங்குவார்கள். தமிழக அரசின் பட்ஜெட்டில் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி முதலீடு ஈர்ப்பதாக கூறிவிட்டு ரூ.3.03 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடு ஈர்த்துள்ளனர். இதில் ரூ. 27,000 கோடி குறைந்துள்ளது.
மக்களை உயர்த்துவதற்காக ஊக்கத் தொகை
தமிழகத்தில் மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் பெண்கள் ஊக்கத்தொகை உயர்த்தி வழங்குதல், ரூ.10 ஆயிரம் உரிமைத்தொகை அளித்தல் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, பாஜக ஆளும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் படும் துயரத்தை உணர்ந்துதான் பிரதமர் மோடியும் உறுதுணையாக இருந்து வருகிறார் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: நல்லகண்ணுவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி – முதல்வர் அறிவிப்பு