சுதந்திர போராட்டம் முதல் கடைசி காலம் வரை.. நல்லகண்ணு கடந்து வந்த பாதை!
Nallakannu Political Career: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சுதந்திர போராட்டம் முதல் அரசியல் வாழ்க்கை மற்றும் கடைசி காலம் வரை அவர் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். இதில், அவர் பிறந்தது முதல் இறப்பு வரை வாடகை வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான நல்ல கண்ணு இன்று புதன்கிழமை ( பிப்ரவரி 25 ) சென்னையில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இவர் கடந்த வந்த பாதை குறித்து சற்றி விரிவாக பார்க்கலாம். இவர், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டத்தில் ராமசாமி மற்றும் கருப்பாயி தம்பதிக்கு 3- ஆவது மகனாக கடந்த 1925- ஆம் ஆண்டு டிசம்பர் 26- ஆம் தேதி பிறந்தார். இவர் பிறந்த நாளானது கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கப்பட்ட நாளாகும். இதனால், இவருக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒரு வித பிணைப்பு உண்டு. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். சுதந்திர போராட்டத்திற்கு பின்னரும் மக்கள் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த இவர் அந்த கட்சியின் மாநில செயலாளர் மற்றும் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவர் தனக்கென்று சொந்தமாக வீடுகள் இன்றி கடைசி வரை வாடகை வீட்டிலேயே வசித்து வந்தார்.
18 வயதில் இடதுசாரி இயக்கத்தில் இணைந்த நல்லகண்ணு
இவருக்கு தமிழ்நாடு அரசு தடைசால் தமிழர் விருது மற்றும் ரூ.10 லட்சம் வழங்கி இருந்தது. இந்த தொகையுடன் ரூ.5000 சேர்த்து தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு திருப்பி அளித்தார். தனது 18- ஆவது வயதில் இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து ஏழை, எளிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைக்காக போராடி வந்தார். பாரதியார் பாடிய புரட்சி பாடல்கள் மற்றும் வ.உ.சி. இயக்கம் ஆகியவற்றின் மூலம் நல்லகண்ணு சுதந்திர வேட்கையில் மூழ்கினார்.
மேலும் படிக்க: கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ரூ.290 கோடியில் 6 முக்கிய அறிவிப்புகள்… முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்!




இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நல்லகண்ணு
இதனால், மாணவராக இருந்த காலத்திலேயே பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். பின்னர், மகாத்மா காந்தியின் அறை கூவலை ஏற்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று மாணவர்களை திரட்டி போராட்டங்களை மேற்கொண்டு சிறை சென்றுள்ளார். பின்னாளில், மகாத்மா காந்தியைவிட, நேருவின் பொதுவுடைமை பேச்சால் அதிகம் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சாதி கட்டமைப்பை தகர்ப்பதே லட்சியமாக கொண்ட நல்லகண்ணு
சாதியால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பை தகர்ப்பதும், சுரண்டல் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதும் தன்னுடைய லட்சியமாக நல்லகண்ணு வாழ்ந்து வந்தார். கடந்த 1944- ஆம் ஆண்டு ஸ்ரீ வைகுண்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கிளை தொடங்கப்பட்ட போது அதில் இணைந்தார். கடந்த 1992 முதல் 2005 ஆம் ஆண்டு வரை 13 ஆண்டு கால இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ஆக பதவி வகித்துள்ளார்.
வாழ்நாளில் பெரும் பகுதியை சிறையில் கழித்த நல்லகண்ணு
சிறு வயது முதலே ஆர்வத்துடன் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தனது வாழ்நாளில் பெரும் பகுதியை போராட்டங்கள் மற்றும் சிறையில் கழித்துள்ளார். விவசாயிகள் போராட்டம், தீண்டாமை எதிர்ப்பு, கனிமவள கொள்ளைக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளார்.
மேலும் படிக்க: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் மறைவு