முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' குறித்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக வைத்திருந்த சந்தேகத்திற்கு தற்போது இயக்குநர் ஹெச். வினோத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 'ஜனநாயகன்' திரைப்படம், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என்பது உண்மைதான். ஆனால், அந்த படத்தின் 50 சதவீதம் மட்டுமே ஜனநாயகனில் உள்ளது என்று ஹெச். வினோத் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பேசிய அவர், "முதல் பாதியில் சுமார் 60 சதவீதமும், இரண்டாம் பாதியில் வெறும் 20 சதவீதம் மட்டுமே ஒரிஜினல் படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.