AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு.. நலம் விசாரிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள்..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இன்று காலை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும், நடிகர் ரஜினிகாந்த் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். நல்லகண்ணுவின் மகள் ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை பற்றி கேட்டு அறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு.. நலம் விசாரிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Feb 2026 13:10 PM IST

சென்னை, பிப்ரவரி 25, 2026: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லகண்ணு உடல்நிலை பின்னடைவு:

இந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அங்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். அதேபோல் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். அவருக்கு செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: “ரூ.1,020 கோடி ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?”.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக சரமாரி கேள்வி!!

நலம் விசாரிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள்:

இந்த தகவல் அரசியல் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வயது மூப்பின் காரணமாக தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அவர் மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்றைய காலை நிலவரப்படி அவர் அதே நிலையில் உள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவற்றை யாரும் நம்ப வேண்டாம்; இவ்வாறான வதந்திகளைத் தவிர்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “என் சக்திக்கு மீறி உழைத்து வருகிறேன்”.. ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமையும்.. முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..

அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இன்று காலை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும், நடிகர் ரஜினிகாந்த் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். நல்லகண்ணுவின் மகள் ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை பற்றி கேட்டு அறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.