AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“என் சக்திக்கு மீறி உழைத்து வருகிறேன்”.. ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமையும்.. முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..

CM Stalins confident speech: தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமைத் தொகையை முடக்க எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்ததாகவும், அதை முறியடிக்கவே ₹5,000 முன்தொகையாக வழங்கப்பட்டதாகவும் முதல்வர் கூறினார். திமுக அரசின் இந்த முயற்சி மக்கள் மத்தியில், "சூப்பர் ஹிட்" ஆகியுள்ளதாக அவர் பெருமிதம் கொண்டார்.

“என் சக்திக்கு மீறி உழைத்து வருகிறேன்”.. ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமையும்.. முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..
முதல்வர் ஸ்டாலின்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 25 Feb 2026 11:39 AM IST

கன்னியாகுமரி, பிப்ரவரி 25: இந்த அரசில் ஒவ்வொரு நாள் ஏதோவொரு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. உங்கள் நம்பிக்கையை காப்பறுவதற்காக என் சக்திக்கு மீறி உழைத்து வருகிறேன் என முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக பேசியுள்ளார். நாகர்கோவிலில் ரூ.1,785 கோடியில் முடிவுற்ற திட்டங்களை இன்று முதல்வர் தொடங்கி வைத்தார். அதோடு, பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், 14 வயதில் இருந்து அரசியலில் இருக்கும் நான் 50 ஆண்டு தொடர் உழைப்பால் இந்த இடத்தில் இருக்கிறேன். நான் போகாத ஊரே தமிழ்நாட்டில் இல்லை என்பால் மக்களுக்கு திட்டங்களை தீட்டுகிறேன் என்றார்.

மேலும் படிக்க: மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் – எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம்..

சாதி இல்லை, மதம் இல்லை, மொழி இருக்கிறது:

குமரி மாவட்டம் அனைத்து மதத்தினரும் நல்லிணக்கத்தோடு வாழும் மாவட்டம் என்று குறிப்பிட்ட அவர், “எனக்குச் சாதி இல்லை, மதம் இல்லை, மொழி இருக்கிறது, இனமான உணர்வு இருக்கிறது” என்று பால பிரஜாதிபதி அடிகளார் தன்னைப் பற்றிப் பாராட்டியதை மேற்கோள் காட்டினார். மேலும், சிஏஏ (CAA) மற்றும் வக்பு திருத்தச் சட்டம் போன்றவற்றுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதைச் சுட்டிக்காட்டி, சிறுபான்மையினருக்குத் திராவிட மாடல் அரசு அரணாக இருக்கும் என்றும் உறுதி தெரிவித்தார்.

தமிழ்நாடு vs என்டிஏ இடையிலான போர்:

பாஜக என்கிற டப்பா எஞ்சினை நம்பி அதிமுக இருக்கிறது. அதிமுக என்கிற மூழ்கும் கப்பலை நம்பி பாஜக இருக்கிறது. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான் கிடைக்கும், ராஜ்ஜியம் கிடைக்காது என்று அவர் கூறினார். இந்த தேர்தல் “தமிழ்நாடு vs என்டிஏ” இடையிலான போர் என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் வளர்ச்சி டெல்லியிலிருந்து தீர்மானிக்கப்படக் கூடாது; அது இங்கிருந்தே ஆளப்பட வேண்டும் எனத் தீவிரமாகப் பேசினார்.

மக்கள் மத்தியில் திமுக முயற்சிகள் சூப்பர் ஹிட்:

தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமைத் தொகையை முடக்க எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்ததாகவும், அதை முறியடிக்கவே ₹5,000 முன்தொகையாக வழங்கப்பட்டதாகவும் முதல்வர் கூறினார். திமுக அரசின் இந்த முயற்சி மக்கள் மத்தியில், “சூப்பர் ஹிட்” ஆகியுள்ளதாக அவர் பெருமிதம் கொண்டார். குஜராத் மெட்ரோவுக்கு ஒப்புதல் அளிக்கும் மத்திய அரசு, தமிழக கோரிக்கைகளை பட்ஜெட்டில் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க: மாநிலங்களவை சீட் கேட்கும் காங்கிரஸ்.. கனிமொழியுடன் ஒன்றரை மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை..

வாக்களிக்காத மக்களுக்கும் உழைக்கிறேன்:

மேலும், இந்த அரசில் ஒவ்வொரு நாள் ஏதோவொரு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. உங்கள் நம்பிக்கையை காப்பறுவதற்காக வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து எனது சக்திக்கு மீறி நான் உழைத்து வருகிறேன் என்று உருக்கமாக பேசிய அவர், ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி மீண்டும் அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.