ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மாணவர்கள் விடுதி ஒன்றின் உணவகத்திற்குள் 4 அடி நீளமுள்ள முதலை ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டாவின் கோரல் பார்க் பகுதியில் உள்ள ஒரு சிறுவர்கள் விடுதியில் மதியம் 1 மணி அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விடுதியின் அடித்தளத்தில் அமைந்துள்ள உணவகத்தின் படிக்கட்டுகளில் முதலை ஒன்று மெதுவாக இறங்கி உள்ளே வரும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.