AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் மறைவு

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் பிப்ரவரி 25, 2026 அன்று மதியம் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் மறைவு
நல்லகண்ணு
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 25 Feb 2026 14:57 PM IST

சென்னை, பிப்ரவரி 25 : தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (Nallakannu) உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அவரது உடல் நிலை குறித்து நலம் விசாரித்தனர். இந்த நிலையில் பிப்ரவரி 25, 2026 அன்று மதியம் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.  அவருக்கு வயது 101. அவரது மறைவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசியலில் அவரது மறைவு பேரிழப்பு என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நல்லகண்ணு உடல் நலக்குறைவால் மரணம்

அரசியலில் நீண்ட அனுபவம் பெற்றவர் நல்லகண்ணு. இவர் சுதந்திர போராட்ட வீரரும் கூட. கடந்த மே 9, 2025 அன்று நல்லகண்ணு தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக அனுமதித்தனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு பின்னர் அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்ப்டடார். அவருக்கு நுரையீரல் தொற்று இருந்ததால் மூச்சுத்திணறல் இருந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து சில மாதங்கள் சிகிச்சையில் இருந்த அவர் பின்னர் வீடு திரும்பினார்.

இதையும் படிக்க : “ரூ.1,020 கோடி ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?”.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக சரமாரி கேள்வி!!

இந்த நிலையில் கடந்த ஜனவரி 1, 2026 அன்று அவருக்கு மீண்டு உடல் குறைவால் அனுமதிக்கப்பட்ட அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கனிமொழியின் இரங்கல் பதிவு

இதையும் படிக்க : “என் சக்திக்கு மீறி உழைத்து வருகிறேன்”.. ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமையும்.. முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..

இது தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், விடுதலைப் போராட்டம் தொடங்கி, தீண்டாமை ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ எதிப்பு என சமூக சீர்த்திருத்த போராட்டங்களில் தன் வாழ்நாளெல்லாம் உழைக்கும் மக்களுடன் தோளோடு தோள் நின்ற முதுபெரும் பொதுவுடைமைப் போராளி – தகைசால் தமிழர் ஐயா நல்லகண்ணுவிற்கு செவ்வணக்கம் என குறிப்பிட்டுள்ளார்.