Adhik Ravichandran: டேர் டெவில் நல்ல படமா அமையனும்.. அப்போதுதான் – ஆதிக் ரவிச்சந்திரன் பேச்சு!
Adhik Ravichandran About Dare devil Movie: மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் மக்கள் இடம்பிடித்த இயக்குநர்தான் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் தற்போது அஜித் குமாரின் டேர் டெவில் திரைப்படத்தை இயக்குகிறார். அந்த விதத்தில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், டேர் டெவில் படம் குறித்து விவரமாக பேசியுள்ளார்.
தமிழில் மக்கள் மத்தியில் அதிகம் அறியப்படும் பிரபல இயக்குநராக இருந்துவருபவர் ஆதிக் ரவிச்சந்திரன் (Director Adhik Ravichandran). இவர் இயக்குநராக ஜி.வி.பிரகாஷ் குமாரின் (GV Prakash Kumar) திரிஷா இல்லனா நயன்தாரா (Trisha Illana Nayanthara) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ஹிட்டடித்தது. இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படத்தில் அஜித் குமார் (Ajith Kumar) ஹீரோவாக நடித்திருந்த நிலையில், திரிஷா இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் தனது 64வது மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு டேர் டெவில் (Dare devil Movie) என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் ஷூட்டிங் பூஜைகள் சமீபத்தில் தொடங்கியிருந்தது. இந்த பூஜையில் பல இயக்குநர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அதில் டேர் டெவில் படம் குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: வேர்ல்ட் ஆப் அரசன் ப்ரோமோ தீபாவளிக்கு இல்லையா? சிம்பு ரசிகர்களுக்கு ஷாக் தகவல்!
டேர் டெவில் திரைப்படம் குறித்து வெளிப்படையாக பேசிய ஆதிக் ரவிச்சந்திரன்:
அந்த நேர்காணலில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், “நான் கடவுளிடம், தயவுசெய்து டேர் டெவில் படத்திற்கு நல்லது செய்ய வேண்டும்’ என்று மட்டுமே பிரார்த்தனை செய்தேன். நாங்கள் அனைவரும் ஏதோவொன்றைச் செய்துகொண்டிருக்கிறோம். ஷாலினி மேடம் முதல் முறையாகத் தயாரிக்கிறார். இது ஒரு பிளாக்பஸ்டர் ஆகி, நல்ல வசூல் செய்தால், நாங்கள் 10 அல்லது 20 படங்கள் செய்யலாம்.
இதையும் படிங்க: க்யூட்டானா ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே… 4 ஆண்டுகளைக் கடந்தது லவ் டுடே படம் – வீடியோ பதிவை வெளியிட்டது படக்குழு!
என்னை விடப் சிறந்த இயக்குநர்களுக்கும், திறமையான இயக்குநர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். படம் வெற்றியாவது எதுவும் எங்கள் கையில் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் படம் நன்றாக ஓட வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் சில காரணங்களால் ஒரு படம் நன்றாக ஓட விடுவதில்லை. அது எப்படி நடக்கிறது அல்லது ஏன் நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது” என அதில் அவர் கூறியுள்ளார்.
டேர் டெவில் திரைப்படம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
#DareDevil is here💥🎲🔥💥
Thank you dear #Ajith sir #Shalini mam @Braveheartsprod @anirudhofficial sir @SureshChandraa sir @Iamunnimukundan sir @sreeleela14 @rparthiepanb sir @suneeltollywood sir @AbinandhanR @editorvijay @supremesundar
#Subbhunaarayan @itsanuvardhan @kayoas13 @valentino_suren @Donechannel1 @AbdulNassarOffl @AMBANINSK @riseandroar_inc— Adhik Ravichandran (@Adhikravi) November 2, 2026
இந்த படத்தில் அஜித் குமார் ஹீரோவாக நடிக்க, அவருடன் ஸ்ரீலீலா, உன்னி முகுந்தன், பிரபு, சுனில் மற்றும் பல்வேறு நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடிக்கவைக்க பிரபல நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது என கூறப்படுகிறது.