AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ 1200 கோடி வசூலில் இணைந்திருக்கும் ஆனால்… ஜெயிலர் 2 படம் ரூ 1000 கோடி வசூலை தாண்டாதது குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம்!

Tiruppur Subramaniam About Jailer 2: தமிழ் சினிமாவில் 2026ம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்த திரைப்படம்தான் ஜெயிலர் 2. இந்த திரைப்படமானது கடந்த 2026 அக்டோபர் 15ல் திரையரங்குகளில் வெளியான நிலையில், இன்னும் ரூ 1000 கோடி வசூலை பெறவில்லை. இது குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம் கொடுத்துள்ளார்.

ரூ 1200 கோடி வசூலில் இணைந்திருக்கும் ஆனால்… ஜெயிலர் 2 படம் ரூ 1000 கோடி வசூலை தாண்டாதது குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம்!
ஜெயிலர் 2 வசூல் பற்றி பற்றி திருப்பூர் சுப்பிரமணியம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 03 Nov 2026 12:36 PM IST

இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) இரண்டாவது முறை இணைந்து நடித்திருந்த திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2 Movie). இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், அவருடன் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர். மலையாள நடிகர்கள் முதல் இந்தி நடிகர்கள் என பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இப்படம் 2026 அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்புகளை பெற்றிருந்தது.

ஆனால் இன்னும் இப்படமானது ரூ 1000 கோடி வசூலை எட்டவில்லை. அந்த விதத்தில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த திரைப்பட விநியோகஸ்தரர் திருப்பூர் சுப்பிரமணியம் அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தெலுங்கு சினிமாவில் அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்… நடிகர் நானி ஓபன் டாக்!

ஜெயிலர் 2 படம் ரூ 1000 கோடி வசூலை எட்டாத காரணம் பற்றி திருப்பூர் சுப்பிரமணியம்:

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த திருப்பூர் சுப்பிரமணியம், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படத்திற்கு நெகிழ்வான டிக்கெட் விலை நிர்ணயம் கிடைத்திருந்தால், அது உலகளவில் ரூ 1200 முதல் ரூ 1300 கோடி வரை வசூலித்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். முதல் நாளின் திரையிடலில் இருந்த கட்டுப்பாடான கொள்கைகளால், படத்தின் மொத்த வசூலில் சுமார் ரூ 5 முதல் 6 கோடி இழப்பு ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பிபி திருந்துங்கடா அகாடமி.. நகைச்சுவை டாஸ்க்குடன் பிக் பாஸ் வீடு – வைரலாகும் ப்ரோமோ!

மேலும் தமிழ் சினிமா தனது முதல் ரூ. 1000 கோடி பிளாக்பஸ்டர் படத்திற்காக இன்னும் காத்திருக்கும் நிலையில், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் பல படங்கள் இந்த கிளப்பில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. ஜெயிலர் 2 படமானது இதுவரைக்கும் உலகளவில் ரூ. 807.25 கோடி வசூலித்துள்ளது, விரைவில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடித்த ராமாயணா வெளியாவதால், ஜெயிலர் 2 படமானது ரூ 1000 கோடி வசூலை தாண்டுவது கடினமாகத் தெரிகிறது என அவர் அதில் தெரிவித்திருக்கிறார்.

ஜெயிலர் 2 திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு;

இந்த ஜெயிலர் 2 திரைப்படமானது வெளியான சமயத்தில் இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு இருந்தது. இந்த படத்தில் குறைகூறும் வகையில் எதுவும் இல்லாத நிலையிலும், இன்னும் இப்படம் ரூ 1000 வசூலை நெருங்கவில்லை. தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்கள் இதுவரைக்கும் ரூ 1000 கோடி வசூலை நெருங்கியதில்லை என்ற நிலையில், இப்படம் நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us