AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிபி திருந்துங்கடா அகாடமி.. நகைச்சுவை டாஸ்க்குடன் பிக் பாஸ் வீடு – வைரலாகும் ப்ரோமோ!

Bigg Boss Tamil Season 10: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. அந்த விதத்தில் இந்த 9வது வார தொடக்கமானது பிபி திருந்துந்துங்கடா அகாடமி என்ற ஃபன் டாஸ்க்குடன் தொடங்கியுள்ளது. தற்போது இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

பிபி திருந்துங்கடா அகாடமி.. நகைச்சுவை டாஸ்க்குடன் பிக் பாஸ் வீடு – வைரலாகும் ப்ரோமோ!
பிபி திருந்துங்கடா அகாடமிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 03 Nov 2026 10:41 AM IST

சின்னத்திரை மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ரியாலிட்டி ஷோவாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக பணியாற்றிவரும் நிலையில், கடந்த 2026ம் செப்டம்பர் மாதத்தில் இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமானது.மொத்தம் 19 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், தற்போது வெறும் 14 போட்டியாளர்கள் மீதம் உள்ளனர். கடந்த வாரம் வாக்குகள் எண்ணிக்கைபடி கரீஷ்மா வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், டிடிஃஎப் வாசன் முகேஷை எவிக்ஷன் ப்ரீ பாஸை கொண்டு காப்பாற்றியிருந்தார்.

மேலும் தற்போது இந்த நிகழ்ச்சியானது 9வது வாரத்தில் உள்ள நிலையில், இந்த வாரத்திற்கான டாஸ்க் ஆரம்பமாகியுள்ளது. பிபி திருந்துந்துங்கடா அகாடமி என்ற காமெடி டாஸ்க் மூலம் இந்த வாரம் அமையும் என கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தெலுங்கு சினிமாவில் அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்… நடிகர் நானி ஓபன் டாக்!

பிக் பாஸில் இந்த வாரம் காமெடி டாஸ்க்:

இந்த ப்ரோமோவில், பிக் பாஸில் வாரம் வாரமாக டீம் டாஸ்க் ஒன்று கொடுக்கப்படும். அந்த விதத்தில் கடந்தவாரம் கவ்பாய்ஸ் மற்றும் மாஃபியாஸ் என்ற டாஸ்க் நடைபெற்றிருந்தது. தற்போது இந்த வரத்திற்காக பிபி திருந்துந்துங்கடா அகாடமி என்ற ஃபன் டாக் நடத்தப்படவுள்ளது. இந்த டாஸ்கில் திருடர்களாக இருக்கும் போட்டியாளர்களை மனம்திருந்த வைக்கும் அகடாமியாக இது நடக்கும் என்பதுபோல காட்டப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் அஸ்மிதா இந்த அகாடமியின் ஆசிரியராகவும், மற்ற போட்டியாளர்கள் இதன் மாணவர்களாகவும் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: சூர்யாவின் சீன் திரைப்படத்தின் தமிழக FDFS எப்போது தெரியுமா?

இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. கடந்த சில வாரங்களாகவே இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பிரச்சனைகள் மற்றும் சண்டைகள் என கலவரமாகவே அமைந்திருந்தது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் பிபி திருந்துந்துங்கடா அகாடமி டாஸ்க்குடன் நகைச்சுவையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 58வது நாளின் முதல் ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 58 நாட்களை கடந்து சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத்தின் கேப்டனாக லக்ஷ்மி பிரியா இருந்துவருகிறார். அந்த விதத்தில் நேற்று (02/11/2026) அவரின் ஆளுமை குறித்து பல பிரச்சனைகளும் இருந்தது. மேலும் இந்த வாரத்தின் நாமினேஷனும் நடைபெற்றிருந்த நிலையில், கிட்டத்தட்ட 10 போட்டியாளர்கள் நாமினேஷனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us