விஷுவல் ட்ரீட்… மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து வெளியான மஹாசக்தி ட்ரான்ஸ் வீடியோ!
Mahasakthi Trance Song: நடிகை நயன்தாராவின் நடிப்பில் தமிழில் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் மூக்குத்தி அம்மன் 2. இப்படமானது 2026 நவம்பர் 6ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. அந்த விதத்தில் தற்போது இப்படத்திலிருந்து மஹாசக்தி ட்ரான்ஸ் என்ற வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. இது வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
இயக்குநர் சுந்தர் சி (Director Sundar C) இயக்கத்தில் 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் பிரம்மாண்ட படைப்புதான் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் (Mookuthi Amman 2). இந்த படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா (Nayanthara) நாயகியாக நடித்துள்ள நிலையில், கிட்டத்தட்ட ரூ 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா போலீஸ் மற்றும் அம்மன் என இரு வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது பான் இந்திய மக்கள் மத்தியில் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த படத்தை சுந்தர் சி இயக்கியுள்ள நிலையில், குடும்ப ஆடியன்ஸை ஈர்த்துவருகிறது. இந்த படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திலிருந்து தொடர்ந்து அப்டேட்டுகளை படக்குழு பகிர்ந்துவருகிறது.
அந்த விதத்தில் தற்போது இப்படத்திலிருந்து “மஹாசக்தி ட்ரான்ஸ்” (Mahasakthi Trance) என்ற வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ வெளியாகி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இது அல்லவா சர்ப்ரைஸ்.. SK27 பட இயக்குநருக்கு ஐஃபோன் 18 ப்ரோ மேக்ஸ் பரிசளித்த சிவகார்த்திகேயன்!




மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலிருந்து மஹாசக்தி ட்ரான்ஸ் வீடியோவை பகிர்ந்த படக்குழு:
இந்த மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு தமிழ் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் மேலும் அரண்மனை 1 மற்றும் 4 போன்ற படங்களுக்கும் இவர் தெய்வீக பாடல் இசையமைத்து சிறப்பான ஹிட் கொடுத்துள்ளார். அந்த விதத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு பின்னணி இசை மற்றும் பாடல்கள் என சிறப்பாக தனது இசையை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் மீது மக்களின் எதிர்பார்ப்பு:
இந்த மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ள நிலையில், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பில் இந்த படமானது ரூ 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா லீட் நாயகியாக நடித்துள்ள நிலையில், அவருடன் சிங்கம்புலி, ஊர்வசி, யோகி பாபு, சுனில், ரெஜினா மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிபி திருந்துங்கடா அகாடமி.. நகைச்சுவை டாஸ்க்குடன் பிக் பாஸ் வீடு – வைரலாகும் ப்ரோமோ!
இந்த படமானது முழுக்க முழுக்க தெய்வீகம் மற்றும் கலக்கல் காமெடி கதையிலும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படமானது 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதியில் வெளியாக தயாராகிவருகிறது. அந்த விதத்தில் இந்த படத்திற்கு நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.