AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தெலுங்கு சினிமாவில் அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்… நடிகர் நானி ஓபன் டாக்!

Actor Nani talks about Telugu cinema | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தெலுங்கு சினிமாவில் எப்படி ஒரு மாற்றம் தேவை என்று பேசியது வைரலாகி வருகின்றது.

தெலுங்கு சினிமாவில் அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்… நடிகர் நானி ஓபன் டாக்!
நடிகர் நானிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Nov 2026 19:19 PM IST

தெலுங்கு சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தயாரிப்பாளராகவும், வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்டாகவும் வலம் வருபவர் நடிகர் நானி (Actor Nani). இவர் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன காலக்கட்டத்திலேயே தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் நடிகர் நானி. இவரது நடிப்பில் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நானி நடிப்பில் இருதியாக தி பாரடைஸ் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.

அதுகுறித்து ரசிகர்களின் விமர்சனங்களையும் நடிகர் நானி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து இருந்தார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் நானி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தெலுங்கு சினிமாவில் அப்படி ஒரு மாற்றத்தை நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தெலுங்கு சினிமாவில் அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்:

அந்த பேட்டியில் நடிகர் நானி பேசியதாவது, தெலுங்குத் திரையுலகம் மக்களுடன் நெருக்கமான, அவர்களால் தங்களோடு தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய திரைப்படங்களை உருவாக்க வேண்டும். பெத்லகேம் குடும்ப யூனிட் போன்ற, ஆழமான உணர்வுகளைக் கொண்ட ஒரு எளிமையான காதல் கதை, பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாயை ஈட்டியது. தெலுங்குத் திரையுலகில் ஒரு எளிமையான காதல் கதை மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட திரைப்படத்தின் சாதனையை முறியடிக்கும் அந்த தருணத்திற்காக நான் காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read… நான் எதற்கும் தயார்.. சக போட்டியாளர்களால் கடுப்பாக பேசிய ஜேசன் – தீயாய் பரவும் ப்ரோமோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படம் – வெளியானது அப்டேட்

Follow Us