ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது நானியின் தி பாரடைஸ் படக்குழு… எப்போ எந்த ஓடிடி தெரியுமா?
The Paradise Movie OTT Update | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நானி. இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது தி பாரடைஸ். இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் தொடர்ந்து அதிக அளவில் தெலுங்கு சினிமாவில் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வபோது மற்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக நடிகர் நானியின் நடிப்பில் வெளியாகும் படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் நானியின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது தி பாரடைஸ். மிகப் பெரிய பொருட் செலவில் பீரியட் ஆக்ஷன் ட்ராமாவாக இந்தப் படம் உருவாகி இருந்தது.
படம் கடந்த 24-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ஆனால் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெற தவறியது குறிப்பிடத்தக்கது. மேலும் ரசிகர்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட நடிகர் நானி அதனை கவனத்தில் கொள்வதாகவும் உங்களின் கருத்துகளை புரிந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.




ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது நானியின் தி பாரடைஸ் படக்குழு:
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்த நிலையில் நடிகர் நானி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். அதன்படி நடிகை கயாடு லோஹர் நாயகியாக நடித்து உள்ள நிலையில் நடிகர்கள் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி மற்றும் ராகவ் ஜுயல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற தவறிய நிலையில் தற்போது ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி இந்த தி பாரடைஸ் படம் வருகின்ற 22-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Welcome to Jadal zamana ❤️🔥 https://t.co/YUttNN6mzx
— Netflix India South (@Netflix_INSouth) October 18, 2026
Also Read… திரைத்துறையில் நாயகனாக 36 ஆண்டுகளை நிறைவு செய்த விக்ரம்… கொண்டாடும் ரசிகர்கள்