AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

OM: ஓம் படத்தில் சாய் பல்லவி – ஸ்ரீலீலாவின் வேடம் எப்படி இருக்கும்? – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேச்சு!

Rajkumar Periasamy: தென்னிந்திய மக்கள் மத்தியில் அமரன் திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக மிகவும் பிரபலமானவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இவரின் இயக்கத்தில் தமிழில் புதிதாக உருவாகிவரும் திரைப்படம்தான் ஓம். இதில் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா நடிகைகளாக நடிக்கும் நிலையில், அவர்களின் நடிப்பு குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பகிர்ந்துள்ளார்.

OM: ஓம் படத்தில் சாய் பல்லவி – ஸ்ரீலீலாவின் வேடம் எப்படி இருக்கும்? – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேச்சு!
சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா பற்ற ராஜ்குமார் பெரியசாமிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 Oct 2026 18:21 PM IST

தமிழில் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான ரங்கூன் (Rangoon Movie) என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக நுழைந்தவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Director Rajkumar Periasamy). இவரின் இயக்கத்திலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பிலும் இப்படமானது வெளியாகியிருந்த நிலையில், ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த படம்தான் அமரன் (Amaran Movie). சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) மற்றும் சட்ட பல்லவியின் (Sai Pallavi) நடிப்பில் உருவாகியிருந்த இப்படமானது, கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. உண்மையான கதையை மையமாக கொண்டு இப்படமானது இயக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷின் (Dhanush) நடிப்பிலும், தயாரிப்பிலும் ஓம் (Om Movie) என்ற படத்தில் இணைந்தார்.

இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, சாய் பல்லவி, மம்முட்டி மற்றும் ஸ்ரீலீலா (Sreeleela) உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துவருகிறார்கள். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலாவுடன் பணியாற்றிய விதம் பற்றி பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் சாரும் – நெல்சன் சாரும் கல்லூரி நண்பர்கள் போல இருப்பார்கள்… நடிகை மிர்னா மேனன்

சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலாவுடன் பணியாற்றியது குறித்து பகிர்ந்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி:

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, அதில் “நான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்காக சாய் பல்லவியை அணுகினேன். படத்தில் இரண்டு பெண் கதாபாத்திரங்கள் இருந்தாலும், நான் அவரை நடிக்க வைக்க விரும்பிய பாத்திரமும் அவருக்குப் பிடித்திருந்தது.

இதையும் படிங்க: நா நிஜத்துக்கும் திருடலையே.. அன்சரால் கண்ணீர் விட்ட முனியம்மாள்!

அவருடன் பணியாற்றுவது மிகவும் இயல்பாக இருந்தது. அதே போல அவர் எல்லாவற்றையும் எளிதாகச் செய்வது போல் காட்டுவார், ஆனால் அதைச் சாதிக்க நிறைய உழைப்பு தேவைப்படுகிறது. மேலும் ஸ்ரீலீலாவிடம் ஒரு இயல்பான நடிகை இருக்கிறார். அவருடைய அந்த சிறப்பான பக்கம் இந்தப் படத்தில் வெளிப்படும்” என அதில் அவர் கூறியுள்ளார்.

சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியதாக வைரலாகும் எக்ஸ் பதிவு:

தனுஷ் முன்னணி நாயகனாக நடித்துவரும் படம்தான் ஓம். இதில் மலையாள நடிகர் மம்முட்டி தனுஷின் தந்தையக நடித்துள்ளார். இப்படமானது குற்ற பின்னணி மற்றும் நிஜ கதைகளை உள்ளடக்கிய சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தை வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us