நா நிஜத்துக்கும் திருடலையே.. அன்சரால் கண்ணீர் விட்ட முனியம்மாள்!
Bigg Boss 10 Promo: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இன்றுடன் (16/10/2026) இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி 40 நாட்களாகியுள்ளது. இன்று வெளியான 2வது ப்ரோமோவில் அன்சரினால் முனியம்மாள் கண்ணீர் விட்டுள்ளார். அது எதற்காக என விவரமாக பார்க்கலாம்.
சின்னத்திரை தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss). தமிழில் கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சியானது தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை மொத்தமான 9 சீசன்கள் முடிந்துள்ளது. மேலும் தற்போது இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், சிறப்பாக வரவேற்கப்பட்டுவருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், சிறப்பாக கையாண்டு வருகிறார். இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 40 நாட்களை கடந்துள்ள நிலையில், 6வது வாரத்தின் இறுதியில் உள்ளது. அந்த வகையில் தற்போது இந்த நிலசியில் டைமென்ட் ஹெய்ஸ்ட் மற்றும் டான்ஸ் 10.0 போன்ற டாஸ்குகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் டைமெண்டை முனியம்மாள் திருடும்போது மற்ற போட்டியாளர்களிடையே வசமாக சிக்கிக்கொண்டார்.
இதனால் அவரை பிக் பாஸ் ஜெயிலில் அடைத்த நிலையில், மழையின் காரணமாக அவர் அதிலிருந்து வெளியேறியிருந்தார். இந்நிலையில் அன்சார் தனது கடுமையான வார்த்தையில் அவரை திட்டிய நிலையில், முனியம்மாள் கண்ணீர் விட்டுள்ள ப்ரோமோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன்தான்…. ஜெயிலர் 2 படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடிகளா?
அன்சரால் கண்ணீர் விட்ட முனியம்மாள்:
பிக் பாசில் டைமென்டை திருடி மாட்டிக்கொண்ட காரணத்தால், முனியம்மாள் பிக் பாஸ் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். வெளியே கடுமையாக மழை பெய்திருந்த நிலையில், முனியம்மாள் அந்த சிறையிலிருந்து வெளியேறியிருந்தார்.
இதையும் படிங்க: எனதருமை நண்பர்… ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்திற்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்!
இந்நிலையில் அது குறித்து முனியம்மாளிடம் அன்சர் கேட்டிருந்த நிலையில், கொஞ்சம் கடுமையாக அவர் பேசியிருந்த்ர. இதனால் முனியம்மாளை மீண்டும் ஜெயிலுக்கு திரும்பி கண்ணீர் நடித்திருந்தார். வினோத் பாபுவும் முனியம்மாளுக்கு ஆறுதலாக பேசியதுபோல இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 40வது நாளின் 2வது ப்ரோமோ குறித்து வெளியான எக்ஸ் பதிவு:
#Day40 #Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/w7DhGKoGSR
— Vijay Television (@vijaytelevision) October 16, 2026
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 6வது வாரத்தின் இறுதியில் உள்ள நிலையில், இந்த வாரத்தில் மொத்தம் 2 எவிக்ஷன் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த விதத்தில் டிடிஎப் வாசனுக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பதாக தெரிகிறது. அதன் காரணமாக இந்த வாரத்தில் இந்தத் இரு போட்டியாளர்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேறுகிறார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.