AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கரீஷ்மாவின் டைமென்ட்… போட்டியாளர்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட டிடிஃஎப் வாசன் – ப்ரோமோ!

Bigg Boss Tamil 10: தமிழில் மக்களிடையே சிறப்பாக வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சியில் ஒன்றாக இருப்பதுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் தற்போது டைமென்ட் ஹெய்ஸ்ட் டாஸ்க் நடைபெற்றுவரும் நிலையில், கரீஷ்மாவின் டைமென்டை டிடிஃஎப் வாசன் கேட்ட நிலையில் அது மற்ற போட்டியாளர்கள் சிக்கிக்கொண்டது. அது தொடர்பான ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

கரீஷ்மாவின் டைமென்ட்… போட்டியாளர்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட டிடிஃஎப் வாசன் – ப்ரோமோ!
கரிஷ்மா மற்றும் டிடிஎஃப் வாசன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Oct 2026 19:37 PM IST

சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவது பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது தமிழில் அதிகம் டிஆர்பி கொண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது. இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கியிருந்த நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 39 நாட்களாகிய நிலையில், விறுவிறுப்பாகி நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் இந்நிகழ்ச்சியில் டைமென்ட் ஹெய்ஸ்ட் டாஸ்க் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்த டாஸ்கில் கரீஷ்மா மற்றும் டிடிஃஎப் வாசன் இருவருமே வைரத்தை திருடியிருந்த நிலையில், கரீஷ்மா வைத்திருந்த வைரமானது போட்டியாளர்களிடம் மாட்டிக்கொண்டது. இது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சின்னத்திரை நிகழ்ச்சியில் கண்கலங்கிய சமந்தா.. வெங்கடேஷ் பட் செய்த விஷயம்!

பிக் பாஸி மற்ற போட்டியாளர்களிடம் மாட்டிக்கொண்ட கரீஷ்மா:

இந்த ப்ரோமோவில், டிடிஃஎப் வாசன், கரீஷ்மாவிடம் உன்னுடைய வைரத்தை எடுத்துக்கொண்டு வா என கேட்கிறார். அதற்கு கரீஷ்மா அவர் மறைத்து வைத்திருந்த டைமென்டை எடுத்துக்கொண்டு டிடிஃஎப் வாசனிடம் வந்தார். மேலும் அக்ஷிதா அவரை சோதித்த நிலையில், அந்த வைரத்தை தன்யாவிடம் அவர் கொடுத்து டிடிஎப் வஸானிடம் கொண்டுவந்தார்.

இதையும் படிங்க: இந்த ஜெனரேஷனின் ஆக்ஷன் ஹீரோ.. சிவகார்த்திகேயனை புகழ்ந்த வித்யுத் ஜாம்வால்!

இதை சக போட்டியாளராக இருந்த ஷமா பார்த்த நிலையில், அந்த வைரத்தை டிடிஎப் வாசனிடமிருந்து எடுக்க முயற்ச்சி செய்வதுபோல இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்த ப்ரோமொவனது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 39வது நாளின் 4வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது டான்ஸ் 10.0 மற்றும் டைமென்ட் ஹெய்ஸ்ட் டாஸ்க் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், மக்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியிலேயே டிடிஃஎப் வாசனுக்கு மக்கள் மத்தியில் அதிக வாக்குகள் இருந்துவரும் நிலையில், அவர் இந்த பிக் பாஸ் சீசன் 10ன் டைட்டில் வின்னராக மாறுவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us