AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சின்னத்திரை நிகழ்ச்சியில் கண்கலங்கிய சமந்தா.. வெங்கடேஷ் பட் செய்த விஷயம்!

Samantha Emotional on Master Chef Show:தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஸ்டார் நடிகையாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவர் சோனி விழா தொலைக்காட்சியில் செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தொகுக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது சமந்தா கண்கலங்கியது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சின்னத்திரை நிகழ்ச்சியில் கண்கலங்கிய சமந்தா.. வெங்கடேஷ் பட் செய்த விஷயம்!
சமந்தா மற்றும் வெங்கடேஷ் பட்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 15 Oct 2026 17:54 PM IST

கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் நடிகையாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் பல்வேறு மொழிகளில் தொடர்ந்து பல திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இறுதியாக மா இன்டி பங்காரம் (Maa Inti Bangaaram) என்ற தெலுங்கு படத்தில் அதிரடி ஆக்ஷன் நாயகியாக நடித்திருந்தார். இந்த படமானது சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பின் இவர் கர்ப்பமான நிலையில், தற்போது சினிமாவிலிருந்து விலகி சின்னத்திரை நிகழ்ச்சியில் நுழைந்துள்ளார்.

சமந்தா தற்போது சோனி விழா (Sony Vizha) என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் (Celebrity Master Chef) என்ற ஷோவில் தொகுப்பாளராக இருந்துவருகிறார். அந்த விதத்தில் இந்த ஷோவானது இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்துவருகிறது. அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியில் அவர் கண்கலங்கியது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே… 22 ஆண்டுகளைக் கடந்தது 7ஜி ரெயின்போ காலனி படம்!

சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் சமந்தா கண்கலங்கியது தொடர்பாக பரவும் வீடியோ பதிவு:

இந்த வீடியோவில் தொகுப்பாளர் ஒருவர் சமந்தாவிடம், நீங்கள் சென்னையில் உள்ள துர்கா ஹோட்டலுக்குலே செல்கிறோம், நாங்களெல்லாம் உங்க பள்ளி நண்பர்கள் என்றதும், அவர் கண்கலங்கிவிட்டார். உடனே பேசிய சமந்தா அங்குள்ள தயிர் வடை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் என்கிறார். உடனே அருகே நடுவராக இருந்த வெங்கடேஷ் பட், அவங்க இப்போது கர்ப்பமாக இருக்கிறார், அதனால் நானே அவருக்கு துர்கா ஹோட்டல் தயிர் வடை பண்ணி கொடுக்கிறேன் என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: தலைவரு நிரந்தரம்… ஜெயிலர் 2 படத்தின் FDFS காட்சியை பார்த்து வாழ்த்திய தமிழ் பிரபலங்கள்!

அந்த விதத்தில் அவர் சமந்தாவிற்கு அதை பண்ணி கொடுத்திருந்த நிலையில், அதை சாப்பிட்ட சமந்தா நான் சாப்பிடத்திலேயே மிகவும் ஸ்பெஷலான தயிர் வடை இதுதான் என நெகிழ்ச்சியுடன் இந்த வீடியோவில் பேசியிருந்தார். தற்போது இந்த வீடியோ பதிவானது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. மேலும் சமந்தாவுக்கு ஆதரவாக பல்வேறு ரசிகர்களும் தங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us