AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Samantha: எனக்கு பிடித்த ஹீரோ அவர்தான்… சமந்தா சொன்ன விஷயத்தால் அதிர்ந்த அரங்கம்!

Samantha About Her Favorite Hero: தென்னிந்திய சினிமாவில் முன்னணி உச்ச நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், படங்களிலிருந்து விலகியிருக்கிறார். சமீபத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ குறித்து பேசியுள்ளார்.

Samantha: எனக்கு பிடித்த ஹீரோ அவர்தான்… சமந்தா சொன்ன விஷயத்தால் அதிர்ந்த அரங்கம்!
சமந்தாவின் விருப்பமான நடிகர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 08 Oct 2026 17:57 PM IST

கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் முன்னணி உச்ச நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). தெலுங்கு சினிமாவின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான நிலையில், தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறார். இவர் தமிழில் முதல்வர் விஜய் (CM Vijay) முதல் சூர்யா (Suriya) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருக்கிறார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக சினிமாவில் வெளியான திரைப்படம் மா இன்டி பங்காரம் (Maa Inti Bangaaram). தெலுங்கு மொழியில் உருவான இப்படம் தமிழில் “எங்கள் தங்கம்” என்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தின் தொடக்கத்தில் வெளியான நிலையில், கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்படத்தின் வெற்றிவிழாவின்போதே தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை சமந்தா அறிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது சினிமாவிலிருந்து விலகியிருக்கிறார். சமீபத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்துகொண்டார், அதில் பேசிய சமந்தா, தனக்கு பிடித்த ஹீரோ குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: இயக்குநர் எச் வினோத்தின் படத்தில் கமல் ஹாசன் நடித்திருந்தால்… இரா. சரவணன் ஓபன் டாக்

தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ குறித்து பேசிய நடிகை சமந்தா ரூத் பிரபு:

அந்த நிகழ்ச்சியின்போது ஸ்க்ரீனில் முதலமைச்சர் விஜய்யுடன் சமந்தா இருக்கும் புகைப்படம் கட்டப்பட்டிருந்தது. உடனே சமந்தா, “இவர் எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ” என அதில் பேசியிருந்தார். சமந்தா அவ்வாறு பேசியிருந்த நிலையில், அங்குநிகழ்ச்சில் கூடியிருந்த அரங்கமே அதறியது. தற்போது இது குறித்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.

முதல்வர் விஜய் குறித்து சமந்தா பேசியது தொடர்பாக வைரலாகும் பதிவு:

தமிழக முதல்வர் விஜய், தான் அரசியலியல் முழுமையாக இறங்குவதற்கு முன் சினிமாவில் நாயகனாக கலக்கிவந்தார். இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 69 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் சமந்தாவுடன் கிட்டத்தட்ட 3 படங்களுக்கும் மேல் இணைந்து நடித்துள்ளார்.

இதையும் படிங்க: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அந்த தெலுங்கு சினிமா நடிகரை இயக்க உள்ளாரா? வைரலாகும் தகவல்

முதல்வர் விஜய் மற்றும் சமந்தாவின் நடிப்பில் கத்தி, மெர்சல், தெறி போன்ற படங்கள் வெளியாகி இவர்களுக்கு மாபெரும் ஹிட்டை கொடுத்திருக்கிறது. அந்த விதத்தில் நடிகை சமந்தா இதுவரையிலும் சினிமாவில் நாயகியாக படங்களில் நடித்துவருகிறார். தற்போது இவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில், கொஞ்ச மாதங்களுக்கு சினிமாவிலிருந்து விலகியிருக்கிறாராம்.

Follow Us