இயக்குநர் எச் வினோத்தின் படத்தில் கமல் ஹாசன் நடித்திருந்தால்… இரா. சரவணன் ஓபன் டாக்
Era Saravanan talks about H Vinoth and Kamal Hasan Movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் இரா. சரவணன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் எச். வினோத் மற்றும் கமல் ஹாசனின் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் இரா. சரவணன். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இயக்குநர் இரா சரவணன் இயக்க்த்தில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் நந்தன். நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்த இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தினை ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் படங்களை இயக்கி வரும் இரா சரவணன் மற்ற இயக்குநர்களுடன் இணைந்து திரைக்கதையில் வேலை செய்து வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அது தொடர்பான செய்திகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் இரா. சரவணன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் கமல் ஹாசன் மற்றும் இயக்குநர் எச் வினோத் கூட்டணியில் உருவாக இருந்த படம் குறித்து பேசியது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




இயக்குநர் எச் வினோத்தின் படத்தில் கமல் ஹாசன் நடித்திருந்தால்:
அதன்படி அந்தப் பேட்டியில் பேசியதாவது, KH 233 படத்தை ஹெச். வினோத் இயக்குவதாக இருந்தது. அவரது அலுவலகத்தில் இருந்த ஒரு அறையில் அமர்ந்து நான் அந்தக் கதையைப் படித்தேன். கமல்ஹாசன் அந்தப் படத்தில் நடித்திருந்தால், அது மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றியைப் பெற்றிருக்கும். கதையைப் படித்ததும் நான் வினோத்தைக் கட்டிப்பிடித்து, கமல் சாருக்கு இது எவ்வளவு அற்புதமான அறிமுகக் காட்சியாக இருக்கும் என்று கூறினேன்.
அந்த அறிமுகக் காட்சி என்பது வெறும் கமல் சார் அமர்ந்த நிலையிலிருந்து எழுந்து நிற்பதுதான். ஆனால், வினோத் அதை எழுதிய விதமும், அவர் அதை எப்படிப் படமாக்குவார் என்று நான் கற்பனை செய்து பார்த்த விதமும் மிகச் சிறப்பாக இருந்தன.
இது உண்மையிலேயே நன்றாக இருக்கிறதா? என்று வினோத் என்னிடம் கேட்டார். அது ஒரு மிகச் சிறந்த கதை என்று நான் அவரிடம் கூறினேன். இருப்பினும், பெரிதும் பாராட்டப்பட்ட அந்தக் கதையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது; வினோத்தும் இதனால் மிகவும் சோர்ந்துபோனார் என்று இரா சரவணன் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#HVinoth was supposed to do #KH233. I read the story in his office, in a room. If #KamalHassan had done that film, it would’ve been a great commercial hit. I hugged Vinoth after reading the story and said, “What an intro for Kamal sir.”
The intro sequence is just Kamal Hassan sir standing up after sitting down, but the way he wrote it and the way I imagined him filming it would’ve been extraordinary.
Vinoth asked me, “Is it really good?” I told him it’s a superb 👌 story. However, a story that was celebrated couldn’t go to the next stage. I was very saddened by it. Even Vinoth got very exhausted.
— #EraSaravanan @erasaravanan
— Movies Singapore (@MoviesSingapore) October 7, 2026