AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க… மண்டாடி படக்குழு எடுத்த முக்கிய முடிவு – வைரலாகும் நடிகர் சூரியின் பதிவு

Mandaadi movie once again in IMAX | நடிகர் சூரியின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் மண்டாட்டி. இந்தப் படத்தை மீண்டும் ஐ மேக்ஸில் திரையிட படக்குழு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க… மண்டாடி படக்குழு எடுத்த முக்கிய முடிவு – வைரலாகும் நடிகர் சூரியின் பதிவு
மண்டாட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Oct 2026 13:48 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியளில் இடம்பிடித்து வருகிறார் நடிகர் சூரி. இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு ஒவ்வொரு படத்திற்கும் தன்னை அதிக அளவில் மெருகேற்றி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறார் நடிகர் சூரி. இந்த நிலையில் நடிகர் சூரி நாயகனாக நடித்து கடந்த செப்டம்பர் மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மண்டாட்டி. ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக உள்ள சுஹாஸ் வில்லனாக நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், மகிமா நம்பியார், மிதுன் ஜெய் சங்கர், ரவீந்தர் விஜய், பால சரவணன், கிரிஷ் ஹாசன் மற்றும் ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க… மண்டாடி படக்குழு எடுத்த முக்கிய முடிவு:

கடலில் நடைபெறும் படகுப் போட்டி அதனால் ஏற்படும் பகை மற்றும் துரோகம் ஆகியவையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் வெளியான போது ஐ மேக்ஸ் திரையரங்குகளிலும் ஒளிபரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து காட்சிகள் நீக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது மீண்டும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஐ மேக்ஸ் திரையரங்குகளில் வருகின்ற 09-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு முதல் மண்டாடி வெளியாக உள்ளதாக சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read… சிரஞ்சீவியின் படத்தின் இணைந்த அனுராக் காஷ்யப் – வெளியானது அப்டேட்

நடிகர் சூரி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… லோகேஷ் கனகராஜுடன் ஹீரோவாக அறிமுகமாகும் அனிருத்? அட இயக்குநர் இவரா?

Follow Us