AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Atlee: பத்தா படத்தை ஆஸ்கர் விருதுக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன் – அட்லீ பேச்சு!

Atlee Kumars Oscar Dream: தென்னிந்திய மொழிகளில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் அட்லீ குமார். இவரின் தயாரிப்பில் சமீபத்தில் விஜய் சேதுபதியின் பத்தா திரைப்படமானது வெளியாகியிருந்தது. இப்படத்தின் வெற்றிவிழாவில் பேசிய இவர், பத்தா படத்தை ஆஸ்கர் விருதுக்கு கொண்டு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Atlee: பத்தா படத்தை ஆஸ்கர் விருதுக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன் – அட்லீ பேச்சு!
அட்லீ Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Oct 2026 20:23 PM IST

கோலிவுட் சினிமாவில் புகழ்ப்பெற்ற இயக்குநர்களில் ஒருவர்தான் அட்லீ குமார் (Atlee Kumar). இவரின் இயக்கத்தில் தமிழில் முதல்வர் விஜய் (CM Vijay) முதல் ஆர்யா வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் எந்திரன் முதல் நண்பன் போன்ற திரைப்படங்கள் வரை உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதன் பிறகு இவர் இயக்குநராக இயக்கிய முதல் திரைப்படம்தான் ராஜா ராணி (Raja Rani). கடந்த 2013ம் ஆண்டில் வெளியான இந்த படமானது இவருக்கு இயக்குநராக மாபெரும் வெற்றியை கொடுத்தது. இதன் பிறகு முதல்வர் விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்த 3 படங்களை இயக்கி மாபெரும் பிரம்மாண்ட இயக்குநரானார்.

இதன் பின் பாலிவுட் பக்கம் சென்ற இவர், ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. மேலும் தற்போது தயாரிப்பாளராக இவர் படங்களை தயாரித்துவரும் நிலையில், விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) பத்தா (Baththa) படத்தை தயாரித்தார். இப்படத்தின் வெற்றிவிழா இன்று (05/10/2026) நடைபெற்றிருந்த நிலையில், அதில் பத்தா படம் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: இதுக்கா சண்ட.. பிக் பாஸில் ஜேசன் மற்றும் டிடிஎப் வாசனுக்கும் இடையே மோதல் – வைரலாகும் புரோமோ!

பத்தா திரைப்படம் மற்றும் ஆஸ்கார் விருது குறித்து பேசிய அட்லீ:

அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய இயக்குநர் அட்லீ, “நான் விஜய் சாருடன் படம் பண்ணப்போறேன், ஷாருக்கான் சாருடன் படம் பண்ணப்போறேன் என நான் ஸ்கூல் படிக்கும்போதே சொன்னேன். மக்கள் என்னை பார்த்து சிரித்தார்கள். ஆனால் நான் அதை செய்துவிட்டேன். அதுபோலவே பத்தா படத்தை ஆஸ்கார் விருதுக்கு எடுத்து செல்ல விரும்புகிறேன். அது எப்படி இருக்கும் என பார்க்க விரும்புகிறேன். அங்கே நிற்பதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். நான் நிச்சயமாக தமிழில் பேசப் போகிறேன்.

இதையும் படிங்க: உறுதியானது சூர்யா – எச்.வினோத் கூட்டணி? கவனத்தை ஈர்க்கும் தகவல்

நம்மால் முடியும். நம்மால் நிச்சயமாக முடியும். ஹாலிவுட் ஒரு சிறிய இடம், நாம் அங்கே எளிதாகச் செல்லலாம். ராக்கா படத்தைப் பார்த்து தமிழ் மக்கள் மிகவும் பெருமைப்படுவார்கள். ராக்கா படத்தில் பணியாற்றிய ஹாலிவுட் ஆட்கள் திகைத்துப்போய், “யார் இவன்..?” என்று சொன்னார்கள். அதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்..” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

பத்தா திரைப்படம் குறித்து இயக்குநர் அட்லீ வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் நடிப்பிலும் கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் பத்தா. வித்தியாசமான கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், மக்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது.

Follow Us