AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உறுதியானது சூர்யா – எச்.வினோத் கூட்டணி? கவனத்தை ஈர்க்கும் தகவல்

Suriya And H Vinoth Project Locked | உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக சூர்யா நடிக்க உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உறுதியானது சூர்யா – எச்.வினோத் கூட்டணி? கவனத்தை ஈர்க்கும் தகவல்
எச். வினோத் - சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Oct 2026 16:10 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் எச்.வினோத். இவர் சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் எச் வினோத் தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் கார்த்தி, அஜித் குமார் மற்றும் தளபதி விஜய் என பலருடன் பணியாற்றி உள்ளார் இயக்குநர் எச் வினோத். மேலும் இயக்குநர் எச் வினோத் தமிழ் சினிமாவில் இறுதியாக இயக்கி உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இதுதான் தளபதி விஜய் தான் நடிக்கும் இறுதிப் படம் என்று தெரிவித்து இருந்ததால அது மேலும் ஒரு சிறப்பை சேர்த்துள்ளது.

இந்தப் படம் சென்சார் பிரச்சனை, இணையத்தில் முழுப் படமும் லீக் என பல சிக்கள்களை சந்தித்து வந்தாலும் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் எச் வினோத் அடுத்ததாக எந்த நடிகரை வைத்து படம் இயக்க உள்ளார் என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

உறுதியானது சூர்யா – எச்.வினோத் கூட்டணி?

இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 48’ படத்தின் பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டன. இந்த ஆண்டில் கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் மற்றும் சீன் (Scene) ஆகிய படங்கள் சூர்யா கைவசம் உள்ளன. இதில் ‘சீன்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

அடுத்ததாக, ‘சூர்யா 48’ திரைப்படம் 2027-ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஹெச். வினோத் இயக்கத்தில் அவர் நடிக்கும் படமும் 2027-லேயே வெளியாக வாய்ப்புள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… Nivin Pauly: பல கஷ்டங்கள்.. நிவின் பாலியின் ஏழு கடல் ஏழு மலை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Yogalakshmi: நோ ஸ்கிரிப்ட்.. நோ பேப்பர்.. அரசன் படத்தின் ஷூட்டிங் எக்ஸ்பீரியன்சை பகிர்ந்த யோகலட்சுமி!

Follow Us