AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த போட்டியாளர்கள்.. முதல் நாளிலே ஜேசனுக்கு வைத்த ஆப்பு – புரோமோ இதோ!

Bigg Boss Season 10 Tamil: தமிழில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 28 நாட்களான நிலையில், தற்போது மூன்று போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ளனர். இது தொடர்பான புரோமோ வெளியாகியுள்ளது.

வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த போட்டியாளர்கள்.. முதல் நாளிலே ஜேசனுக்கு வைத்த ஆப்பு – புரோமோ இதோ!
பிக் பாஸ் புரோமோ Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Oct 2026 15:48 PM IST

விஜய் டிவியில் (Vijay Tv) டிஆர்பி ரேட்டிங்கில் அதிகமாக இருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது கடந்தஹ் 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல்; தொடங்கிய நிலையில், இன்றுடன் கிட்டத்தட்ட 28 நாட்களை கடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் குமரன், ஜாவித் மற்றும் சாவின்யா வேலு என மொத்தம் 3 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்பட்டுவரும் நிலையில், இந்த 5வது வாரத்தில் மூன்று வைல்ட் கார்ட் என்ட்ரி (Wild card entries) போட்டியாளர்கள் உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

அந்தவகையில் இன்று (04/10/2026) பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் மொத்தம் மூன்று வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் நுழைந்துள்ளார். அது வேறு யாருமில்லை, பைக்கர் டிடிஎப் வாசன், அக்ஷிதா அசோக் மற்றும் காமன் மேன் நிகழ்ச்சி போட்டியாளர் க்ரீஷ்மா போன்றவர்கள்தான். இது தொடர்பான புரோமோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சூர்யா அண்ணே ரொம்ப சந்தோசமா இருக்கு… நடிகர் சூரி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு

பிக் பாஸ் சீசன் 10ல் நுழைந்த மூன்று போட்டியாளர்கள்:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 28 நாட்களை கடந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பிரபலமான பைக்கர் டிடிஎப் வச்சான் போட்டியாளராக நுழைந்துள்ளார்.

இதையும் படிங்க: கைதி 2 படத்திற்கு அதிக சம்பளம் கேட்டேனா? – உண்மையை சொன்ன லோகேஷ் கனகராஜ்!

மேலும் பிக் பாஸ் சீசன் 10 முதல் நாளில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அக்ஷிதா மற்றும் காமன் மேன் போட்டியில் கலந்துகொண்டு கடைசி நேரத்தில் வெளியேறிய க்ரீஷ்மா போன்ற மூன்று வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் நுழைந்துள்ளார். இந்த போட்டியாளர்கள் மூவரும் வந்த முதல் நாளிலே ஜேசனை டார்கெட் செய்து பேசியுள்ளனர். இது தொடர்பான புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் 28வது நாளின் 3வது புரோமோ:

இந்நிகழ்ச்சி தற்போது 14 போட்டியாளர்களுடன் நடந்துவரும் நிலையில், மேலும் 3 வைல்ட் கார்ட் என்ட்ரி நுழைந்துள்ளார்கள். மேலும் இந்நிகழ்ச்சியானது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவரும் நிலையில், மேலும் இந்நிகழ்ச்சிய மக்களிடையே சுவாரஸ்யமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us