AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சூர்யா அண்ணே ரொம்ப சந்தோசமா இருக்கு… நடிகர் சூரி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு

Suriya congratulates to Soori | தமிழ் சினிமாவில் நடிகர் சூரி நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் மண்டாட்டி. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா சூரிக்கு பாராட்டி பூங்கொத்துகளை அனுப்பி உள்ளார். அதுகுறித்து நடிகர் சூரி வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யா அண்ணே ரொம்ப சந்தோசமா இருக்கு… நடிகர் சூரி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
சூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Oct 2026 14:36 PM IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் சூரி. இவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். தொடர்ந்து காமெடியனாக நடித்தப் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் சூரியின் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் மண்டாட்டி. இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவானது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது.

இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தைப் பார்த்த பிரபலங்களும் தொடர்ந்து படக்குழுவினர் மற்றும் நடிகர் சூரிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா சூரியைப் பாராட்டி பூங்கொத்தை அனுப்பி உள்ளார். அதுகுறித்து சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சூர்யா அண்ணே ரொம்ப சந்தோசமா இருக்கு:

அந்தப் பதிவில் சூரி கூறியதாவது, சூர்யா  அண்ணே, மண்டாடி பார்த்துட்டு நீங்க அனுப்பிய பூங்கொத்தும், அன்பான வாழ்த்தும் ரொம்ப சந்தோஷமா இருக்கு! என் உழைப்பைப் புரிஞ்சு நீங்க சொன்ன வார்த்தைகள் மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு. இன்னும் நல்லா உழைக்கணும்னு தோணுது. என் வெற்றியை உங்க வெற்றியா நினைச்சு சந்தோஷப்படுற அந்த அன்புக்கு ரொம்ப நன்றி அண்ணே என்று சூரி தெரிவித்துள்ளார்.

Also Read… சினிமாவில் விஜய் – அஜித் இடையேயான போட்டி இப்படிதான் இருந்தது… ஜேசன் சஞ்சய் பேச்சு!

நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மைல்ட்டிஸ்.. சைல்டிஸ்.. சைடிஸ்.. ரோப் டாஸ்க் போட்டியாளர்களை வகைப்படுத்திய அன்சர் – வைரலாகும் புரோமோ!

Follow Us