மொத ராத்திரி பட சக்ஸஸ்.. இயக்குநர் மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்திய கார்த்தி!
Karthi meets the Motha Rathri crew: தமிழ் சினிமாவில் கடந்த 2026ம் ஆண்டில் ஆகஸ்ட் 21ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் மொத ராத்திரி. இந்த படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வெளியாகி வெற்றிபெற்றிருந்த நிலையில், இப்படக்குழுவை நேரில் அழைத்து கார்த்தி வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
கார்த்தியின் (Karthi) நடிப்பில் தமிழில் பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றியை பெற்றுள்ளது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சர்தார் 2 (Sardar 2). இந்த படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஓடிடியில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த விதத்தில் தற்போது கார்த்தி (Karthi) தெலுங்கு இயக்குநர் கல்யாண் சங்கர் (Kalyan Shankar) இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார். இவரின் இயக்கத்தில் உருவாகும் இப்படமானது கார்த்தியின் 30வது படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடித்துவருகிறார். மேலும் இப்படத்திற்கு முன் கார்த்தி இயக்குநர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் (Marshal) என்ற படத்தில் நடித்துள்ள நிலையில், இந்த திரைப்படமானது வரும் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அந்த விதத்தில் அடுத்தடுத்த படங்களின் ஷூட்டிங்கில் கார்த்தி பிசியாக இருந்துவரும் நிலையில், மொத ராத்திரி பட இயக்குநர் ராஜா கருப்பசாமி மற்றும் மொத ராத்திரி படக்குழுவை நேரில் வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அசோக் செல்வனை முதலில் அப்படிப் பார்த்து மிரண்டுவிட்டேன் – ப்ரீத்தி முகுந்த சொன்ன விஷயம்!
மொத ராத்திரி படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் கார்த்தி குறித்த எக்ஸ் பதிவு:
#Day26 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #BiggBossTheTurningPoint #BBTurningPoint #TheTurningPoint #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #VijayTV… pic.twitter.com/nhjUVj1cMt
— Vijay Television (@vijaytelevision) October 2, 2026
நடிகர் கார்த்தி மற்ற நடிகர்கள் மற்றும் மற்ற இயக்குநர்களின் படங்களை வாழ்த்தி வரவேற்பதை வழக்கமாக வைத்துள்ளார். சினிமாவில் புதியதாக அறிமுகமாகும் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களை வாழ்த்திவருகிறார். அந்த விதத்தில் சமீபத்தில் வெளியான மொத ராத்திரி படக்குழுவினரை நேரடியாக அழைத்து கார்த்தி வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
கார்த்தியின் புதிய திரைப்படம்:
நடிகர் கார்த்தி இறுதியாக நடித்த திரைப்படம் மார்ஷல். இதை இயக்குநர் தமிழ் இயக்கியுள்ள நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படமானது 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிக்மா பட ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்காக திரையரங்கு வந்த சங்கீதா – திவ்யா ஷாஷா – வைரலாகும் வீடியோ!
இந்த படத்திற்கு பின் தெலுங்கு இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் கார்த்தி30 படம் உருவாகிவருகிறது. மேலும் இப்படத்திற்கு பின் தனது 31வது படத்தில் இயக்குநர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் கார்த்தி இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.