Shivarajkumar: கொஞ்சம் கூடுதல் திரை நேரம்.. ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் சொன்ன சிவராஜ்குமார்!
Shivarajkumar On Jailer 2: கன்னட சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவராஜ்குமார். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் பல்வேறு மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். இவர் ரஜினிகாந்துடன் ஜெயிலர் 2 படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ள நிலையில், அந்த படம் குறித்து சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவராஜ்குமார் (Shivarajkumar). கன்னட சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இவர் இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் பல்வேறு மொழிகளில் படங்களில் நாயகனாக நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) ஜெயிலர் 1 படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமான நிலையில், அதற்கு பின் தனுஷின் கேப்டன் மில்லர் (Captan Miller) போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கு பின் தற்போது ஜெயிலர் 2 படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இதற்கு பின் அபிஷன் ஜீவிந்த் நடிப்பில் பிக்காசோ என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இவரின் நடிப்பில் இறுதியாக காத்திருக்கும் படம் பெயில் (Bail). இந்த படத்திற்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்துள்ள ஜெயிலர் 2 (Jailer 2) படமானது வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் தனது காட்சிகள் மற்றும் தன்னை பயன்படுத்தியவிதம் குறித்து விவரமாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ஃபகத் ஃபாசிலின் டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தை வெகுவாகப் பாராட்டிய மகேஷ் பாபு
ஜெயிலர் 2 படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து சுவாரஸ்யமான விஷத்தை சொன்ன சிவராஜ்குமார்:
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சிவராஜ்குமார், அதில், “ஜெயிலர் 2 திரைப்படத்தில் படத்தில் எனக்குக் கொஞ்சம் கூடுதல் திரை நேரம் கிடைத்திருக்கிறது, மேலும் அவர்கள் எங்களைப் பயன்படுத்திய விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருடன் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என அதில் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கேங்ஸ்டரா மக்கள் மனதில் இடம் பிடித்தாரா விஜய் சேதுபதி? பத்தா படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ!
ஜெயிலர் 2 படத்தில் பணியாற்றியது குறித்து சிவராஜ்குமார் பேசியது தொடர்பான பதிவு:
#Shivarajkumar:
“I have a little extra screen space in #Jailer2 and the way they has used us is really interesting. Working with Superstar #Rajinikanth sir is such a joy for me♥️🔥” pic.twitter.com/PA8CvXW9pL— AmuthaBharathi (@CinemaWithAB) September 30, 2026
இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில், சன் பிக்ச்சர் நிறுவனத்தின் தயாரிப்பிலும் உருவாகியுள்ள திரைப்படம்தான் ஜெயிலர் 2. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஹீரோவாக நடிக்க, சுராஜ் வெஞ்சாரமூடு, எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், விஜய் சேதுபதி மற்றும் பல்வேறு நடிகர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர். அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.