AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் அஸ்மிதா – சாவன்யா இடையே அதிகரிக்கும் மோதல்… வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 23 நாட்களே முடிவடைந்த நிலையில் போட்டியாளர்களிடையே போட்டியின் வீரம் அதிகரித்து உள்ளது. இன்றைய முதல் புரோமோ வீடியோ தற்போது வெளியாகி பார்வையாளர்களிடையே நிகழ்ச்சியின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

பிக்பாஸில் அஸ்மிதா – சாவன்யா இடையே அதிகரிக்கும் மோதல்… வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் தமிழ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Sep 2026 11:12 AM IST

தமிழ் சின்னத்திரையில் தற்போது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் இருந்தே பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை நிகழ்ச்சி குழு ஏற்படுத்தி உள்ளது. அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முன்னதாக எந்த சீசனிலும் இல்லாத புத்தம் புதிய நிகழ்வாக லீடர் எக்ஸிட் முறை இருந்தது. அது என்ன என்றால் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் அந்த வாரம் வீட்டின் லீடராக உள்ள நபர் மற்ற போட்டியாளர்களில் குறைவான பங்களிப்பை செய்த 3 நபர்களை தேர்வு செய்ய வேண்டும் அந்த மூன்று நபர்களில் யார் மிகவும் குறைவான பங்களிப்பு செய்துள்ளனர் என்பதை மற்ற போட்டியாளர்கள் தங்களது ஓட்டுகளை செலுத்த வேண்டும்.

அதிகப்படியான போட்டியாளர்களால் சொல்லப்பட்ட அந்த நபர் வீட்டைவிட்டு உடனே வெளியேற்றப்படுவார். அப்படி கடந்த மூன்று வாரங்களாக வெளியேற்றப்பட்ட மூன்று போட்டியளர்களும் கடந்த வார இறுதியில் மீண்டும் அனுப்பப்பட்டனர். அவர்கள் வீட்டில் உள்ள மூன்று பேரை தேர்வு செய்து தற்போது ரோப் டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது பிக்பாஸ் வீடு பிபி ஹோட்டலாக மாறியுள்ளது.

பிக்பாஸில் அஸ்மிதா – சாவன்யா இடையே அதிகரிக்கும் மோதல்:

இந்த நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வீடியோவில் பிபி ஹோட்டலில் உள்ள சலுகைகளை சரியாக பயண்படுத்திகாத சாவன்யா மற்றும் அஸ்மிதாவின் கைகளில் கட்டப்பட்டு இருந்த கயிரின் அளவை 5 அடியில் இருந்து மூன்று அடியாக பிக்பாஸ் குறைத்துள்ளார். 5 அடி கயிறு இருக்கும் போதே இருவருக்கும் இடையே சண்டைகள் வெடித்துக்கொண்டு இருந்த நிலையில் தற்போது 3 அடி கயிறு அவர்களிடையே மேலும் சண்டையை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… 20-வது திருமண நாளை அப்படி கொண்டாட காரணம் என்ன? சூர்யா சொன்ன விளக்கம்

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Sigma: ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்திற்கு கிடைத்தது சென்சார்.. படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்?

Follow Us