20-வது திருமண நாளை அப்படி கொண்டாட காரணம் என்ன? சூர்யா சொன்ன விளக்கம்
Actor Suriya about anniversary celebration | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா தங்களது திருமண நாளை வெகு விமர்சயாக கொண்டாடினார். அதற்கு என்ன காரணம் என்பது குறித்து சமீபத்தில் பட விழாவில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் தான் நடிகை ஜோதிகாவும் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். ஜோதிகா தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன காலக்கட்டத்தில் அவரது அக்கா நக்மா தென்னிந்திய மொழிகளில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே ஜோதிகாவை நக்மாவின் தங்கை என்றே தமிழ் சினிமா ரசிகர்கள் அடையாளப்படுத்தி வந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனக்கு என்று இடத்தை மக்கள் மத்தியில் பதிய வைத்தார் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் ஒன்றாக நடிக்கும் போதே அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. அந்த காதலை வீட்டில் உள்ளர்வர்களிடம் கூறி இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்துக்கொண்டனர்.
ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நட்சத்திர தம்பதிகளில் மிகவும் முக்கியமான ஜோடி சூர்யா மற்றும் ஜோதிகா ஆவர். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை பிறந்தது. நடிகை ஜோதிகா சினிமாவில் சில காலங்களாக விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் படங்கள் மற்றும் இணையதள தொடர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




20-வது திருமண நாளை அப்படி கொண்டாட காரணம் என்ன?
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தங்களது 20-வது திருமண நாளை மிகவும் விமர்சயாக கொண்டாடினர். காதலித்து திருமணம் செய்தாலும் திருமணத்திற்கு பிறகு ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொள்ளும் இந்த காலக் கட்டத்தில் தான் காதலித்து திருமணம் செய்த நபரையே 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருமணம் செய்துகொள்வது அவர்களின் காதல் எவ்வளவு ஆழமானது என்பதை வெளிப்படுத்துகிறது.
இந்த நிலையில் தங்களது திருமண நாளை அப்படி கொண்டாட என்ன காரணம் என்பது குறித்து நடிகர் சூர்யா சமீபத்தில் பட விழாவில் கலந்துகொண்ட போது விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. இது ஜோதிகாவின் 20 ஆண்டுகால கனவுத் திட்டமாக இருந்தது. எங்கள் அருமையான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இல்லாமல் இதை எங்களால் ஒருபோதும் சாத்தியமாக்கியிருக்க முடியாது. எங்கள் மீது இவ்வளவு அன்பைப் பொழிந்தமைக்கு மிக்க நன்றி என்று தெரிவித்து இருந்தார்.
Also Read… பிக்பாஸில் குரூப்பிசம் பெண்கள் அணியிலும் இருக்கு… நேரடியாக பேசிய விஜய் சேதுபதி
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
The One #Suriya about 20 Years of Love and War ❤️
– Thank you all for the love, This was #Jyothika’s 20 year bucket list dream, and we could never recreate it without all our wonderful friends and family. Thank you so much for showering us with so much love.#Scene…— Movie Tamil (@_MovieTamil) September 27, 2026